ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.  சற்று முனு வரை குஜராத் அணி 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் ரசிகை ஒருவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதில், “ஸ்ரேயாஸ் ஐயர் என்னுடைய காதலை ஏற்றால் நான் என்னுடைய பெயரை பபிதா ஜி என்று மாற்றி கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  அவரின் இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைராலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.






முன்னதாக கொல்கத்தா-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இதே ரசிகை களத்தில் ஒரு பதாகையுடன் இருந்தார். அவரின் படம் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அந்தப் பதாகையில், “எங்க அம்மா என்னை மாப்பிள்ளை தேடுமாறு கூறியுள்ளார். ஆகவே என்னை திருமணம் செய்து கொள்வீரகளா ஸ்ரேயாஸ் ஐயர்?” என்று எழுதியிருந்தார். அந்த பதாகைக்கு தற்போது பதில் தேடும் வகையில் மீண்டும் ஒரு பதாகையை இந்த ரசிகை எடுத்து வந்துள்ளார். 






இவ்வாறு கடந்த போட்டியிலும் இவருடைய பதாகை வைரலானது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண