ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டிக்கு முன்பாக டெல்லி அணியின் வீரர் டிம் சைஃபெர்டிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின்னர் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் டெல்லி அணியின் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதில் நெகடிவ் வந்த நபர்கள் மட்டும் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர். 


இந்நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளர்கள் உள்ளிட்டவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு அமர்ந்துள்ளனர். இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுடைய முகக்கவசத்தின் டெல்லி கேபிடல்ஸ் லோகோ மற்றும் பெயரின் சுருக்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 


 






இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழந்து சற்று தடுமாறி வருகிறது. 6 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 47 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் மற்றும் கேப்டன் மயாங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஆட்டமிழந்துள்ளனர். அத்துடன் அதிரடி ஆட்டக்காரர் பெர்ஸ்டோவும் ஆட்டமிழந்துள்ளார். 


 






இவ்வாறு பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். டெல்லி அணியில் ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் மார்ஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை டெல்லி அணியில் மொத்தமாக 2 வீரர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண