ஐபிஎல் 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற அணிகள் அனைத்தும் தங்களுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளன. மற்ற ஐபிஎல் தொடரை போல் இந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரங்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாக உள்ளதாக டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரியவந்துள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பவுலராக களமிறங்குபவர் தீபக் சாஹர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய 3வது டி20 போட்டியின்போது சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் குணமடைந்து அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்த்திருந்தபோது இப்போது மீண்டும் அவருக்கு முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து அவர் விலக இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.


மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரசிக் சலாமிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.






அதனை அடுத்து, டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பயோ பபிள் முறையில் நடந்து வரும் 2022 ஐபிஎல் தொடரில் அணி நிர்வாகி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், பாதுகாப்பான முறையில் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு அளவிற்கு இல்லையென்றாலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண