நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. இந்தப் போட்டியில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


இந்நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு மும்பை வீரர்கள் பஞ்சாப் அணியின் வீரர்களுக்கு கை கொடுத்தனர். அப்போது மும்பை அணியில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு பஞ்சாப் அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஜான்டி ரோட்ஸ் கை கொடுத்தார். அப்போது அவர் சச்சினின் காலில் விழுந்து தொட்டார். அவரை காலில் விழாமல் தடுக்க சச்சின் முயற்சி செய்தார். 






இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் பணியாற்றி வந்தார். இந்த முறை அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அவர் மீது உள்ள மரியாதையை இவர் காட்டியுள்ளார் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 














இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண