ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சிறப்பான அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். இதுவரை நடைபெற்றுள்ள 14 சீசன்களில் மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். அதேபோல் இந்த இரண்டு அணிகளும் தொடர்ச்சியாக பல சீசன்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளன. இதன்காரணமாக எப்போதும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இந்த இரண்டு அணிகள் ஒரு அணி இடம்பெற்றுவிடும். 


இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் சென்னை அணி விளையாட உள்ளது. இந்தச் சூழலில் இதுவரை எத்தனை முறை சென்னை அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடியுள்ளது? அவற்றில் எத்தனை போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது தெரியுமா?


 


2009: சென்னை-மும்பை: 


மும்பை அணியிடம் சென்னை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


2011- சென்னை-கொல்கத்தா:


கொல்கத்தா அணியை சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


2012: சென்னை-மும்பை:


சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது. 


2018: சென்னை-மும்பை:


சென்னை அணி இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.


2019: சென்னை-பெங்களூரு:


பெங்களூரு அணியை சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. 


2020: சென்னை-மும்பை:


மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 


 


இவ்வாறு சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது வரை ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 6 முறை களமிறங்கியுள்ளது. அவற்றில் 2 முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. எஞ்சிய 4 முறையும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணி இதுவரை தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் மற்றுமே தோல்வி அடைந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண