கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்த முறை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் புதிய கேப்டன்களுடன் களமிறங்குகின்றன. இந்த முறை சென்னை அணியை ஜடேஜாவும், கொல்கத்தா அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் வழி நடத்த உள்ளனர். இதனால் புதிய கேப்டன்களுக்கு கீழ் இந்த அணிகள் எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. 


 






அதேபோல் வீரர்கள் ஏலத்திற்கு பிறகு நடைபெறும் முதல் போட்டி என்பதால் யார் யார் அணியில் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  சென்னை அணியில் மொயின் அலி மற்றும் தீபக் சாஹர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார்கள். கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரும் களமிறங்க மாட்டார்கள். 


சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டேவான் கான்வே, அம்பத்தி ராயுடு, உத்தப்பா,ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, சிவம் துபே, பிராவோ, கிறிஸ் ஜோர்டன்,ஆடெம் மில்னே,பிரசாந்த் சோலான்கி ஆகியோர் இடம்பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 


 






கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெங்கடேஷ் ஐயர்,ரஹானே,ஸ்ரேயாஸ் ஐயர்,நிதிஷ் ரானா,சாம் பில்லிங்ஸ்,ரஸல்,சுனில் நரேன்,டிம் சௌதி,சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா-சென்னை அணிகள் இதுவரை 25 முறை விளையாடியுள்ளனர். அதில் 17 முறை சென்னை அணியும் 8 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண