நடப்பு ஐபிஎல் தொடரிலும் கொரோனா தொற்று பாதிப்பு லேசாக பரவ தொடங்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்டிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று வீரர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருடைய ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகவில்லை. ஆகவே அதுவரை அனைத்து டெல்லி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் 3 ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மூன்றிலும் அவர்களுக்கு நெகடிவ் வரும் பட்சத்தில் அவர்கள் புனே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 


 


இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்பான தகவல் வெளியான நிலையில் ஐபிஎல் ரசிகர்கள் சிலர் ‘Cancel IPL’ என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சிலர் இதை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர். மும்பை அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 


 






 






 






 






 






 






 






 






 






 


இதனால் பலர் இந்த மாதிரி ட்ரெண்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண