இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று கே.எல்.ராகுல் தன்னுடைய 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 


இந்நிலையில் இந்திய அணியின் வீரரும் அவருடைய நெருங்கிய நண்பருமான ஹர்திக் பாண்ட்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் கே.எல்.ராகுல் ஹர்திக் பாண்ட்யாவின் மகன் அகஸ்தியா வைத்து நடனம் ஆடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






இந்த வீடியோவை பதிவிட்டு, “உங்கள் இருவருக்கும் எப்போதும் என்னுடைய அன்பு இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரோ” எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். 


 


நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கே.எல்.ராகுல் சதம் கடந்து அசத்தினார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். கடையாக நடைபெற்ற 5 ஐபிஎல் தொடர்களிலும் கே.எல்.ராகுல் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வருகிறார். 


 


கடைசியாக நடைபெற்ற 5 ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் அடித்த ரன்கள்:


2018- 659 ரன்கள்


2019- 593 ரன்கள்


2020-670 ரன்கள்


2021-626 ரன்கள்


2022*- 235 ரன்கள்(தற்போது வரை)


 


இவ்வாறு கடந்த 5 ஐபிஎல் தொடர்களிலும் கே.எல்.ராகுல் தொடர்ந்து அசத்தி வருகிறார். இம்முறை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக கேப்டனாக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு முதல் தொடரிலேயே கோப்பை வென்று ராகுல் வென்று தருவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண