நடப்பு ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்த கேப்டன்ஷிப் மாற்றம் இன்று நடந்துள்ளது. 2008-ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த சீசன் வரையிலும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பில் இருந்தார். தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி, 2010, 2011, 2018, 2021 ஆகிய சீசன்களின்போது சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் உலக அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளது.






இந்த நிலையில் நடப்பு சீசனில் அணியின் கேப்டனாக ரவிந்திரா ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. சென்னை அணியின் எதிர்கால நலனை கவனத்தில் கொண்டு மிகச் சரியான முடிவை அணி நிர்வாகமும், தோனியும் எடுத்ததாக சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், கேப்டன் பொறுப்புக்கு தகுதி வாய்ந்த நபராக ஜடேஜா இருந்து வந்தார். சென்னை அணிக்காக ஜடேஜா 8 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணிக்கு பலமுறை வெற்றியை தேடித்த தந்தவர் என பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது விமர்சகர்கள் பார்வையிலும் சரியாகவே பார்க்கப்பட்டது.



ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் கேப்டன்சி பொறுப்பை மீண்டும் ஜடேஜா தோனியிடம் வழங்கி உள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


ஐபிஎல் 15ஆவது சீசனின் 46ஆவது லீக் போட்டியில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. தோனி முதன்முறையாக இந்த சீசனில் கேப்டனாக களம் காண உள்ளார். இது தொடர்பாக நெட்டிசன்கள் மீம்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அதில் சிறந்த கலாய்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.