துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது.


 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கு வெற்றி இலக்காக 165 ரன்கள் நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடக்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக சாஹா, ராய் ஆகியோர் களமிறங்கினார்கள். 


ஹைதராபாத் முதல் ஓவரில் 8 ரன்கள் எடுத்தது. உனத்கட் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸராக மாற்றினார் சாஹா. இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. ஹைதாராபாத் அணி 50 ரன்கள் எடுத்தது. 5 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது. இந்த ஓவரில் 4 பவுண்டரிகளை ராய் விளாசினார். ஹைதராபாத் அணி முதல் விக்கெட்டை இழந்தது. சாஹா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சான் அவரை ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். பவர்பேளயில் அந்த ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. ராயும், வில்லியம்சனும் சீராக விளையட 10 ஓவர் முடிவில் ஹைதராபாத் 90 ரன்கள் எடுக்க, ராய் அறிமுக போட்டியிலேயே அரைசதம் எடுத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, 11 ஆவது ஓவரை ராய் விளாசி தள்ளினார். அந்த ஓவரில் மொத்தம் 21 ரன்கள் அடித்தார். இதன்பின்னர், ஹைதராபாத் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அபாரமாக விளையாடிய வந்த ராய் (60 ரன்கள்), சக்காரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது, 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. 13 ஓவர் முடிவில் மூன்றாவது விக்கெட்டையும் இழந்தது ஹைதராபாத். வந்த வேகத்திலேயே பிரியம் கார்க் டக் அவு ஆகி பெவிலியன் திரும்பினார்.


 






இதன்பின்னர், களமிறங்கிய அபிஷேக் சர்மாவும், கேப்டன் வில்லியமனும் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் தங்களின் விக்கெட்டை இழக்காமல் ரன்களை சேர்த்தனர். இறுதியில் 18. 3 ஓவர்களில் 167 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. வெற்றி இலக்கான ரன்னை பவுண்டரியை அடித்து பெற்ற  வில்லியம்சன்  அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் சர்மா 21 ரன்கள் அடித்தார். இருவரும் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த சீசனில் ஹைதராபாத் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது இந்த வெற்றியை ருசித்துள்ளது.