2021 ஐபிஎல் சீசன் ப்ளே ஆஃப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் இருக்கிறது. அக்டோபர் 15-தேதி துபாயில் நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் அணி எது என்பதை முடிவு செய்யும் குவாலிஃபையர் 2 போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நிறைவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குவாலிஃபையர் 1 போட்டியில் சென்னையிடம் தோல்வியை சந்தித்தது. இதனால், அந்த அணிக்கு மற்றுமொரு வாய்ப்பாக குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாட உள்ளது. கொல்கத்தாவைப் பொருத்தவரை, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நிறைவு செய்து, எலிமினேட்டர் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், பெங்களூருவை வீழ்த்தி இறுதிப்போட்டியை நெருக்கும் வாய்ப்பை பெற்றது கொல்கத்தா.
இந்த சீசனில் டெல்லி, கொல்கத்தா:
டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதியில் திடீரென எழுச்சி கண்ட கொல்கத்தா அணி, கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால், கடைசி சில ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கோப்பை மட்டும் கைக்கு எட்டவில்லை. இந்த சீசனின் லீக் சுற்றிலும் அதிரடி காட்டிய டெல்லி அணி, ப்ளே ஆஃப் சுற்றில் சொதப்பியது.
ஷார்ஜாவில் எப்படி?
போட்டி நடைபெறும் ஷார்ஜா மைதானத்தைப் பொருத்தவரை, 7 போட்டிகளில் 5 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுளன. இந்த சீசனில் டெல்லி தோல்வியடைந்த ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தாவைப் பொருத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போட்டிகளில் சேஸ் செய்த 5 போட்டிகளிலும் வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வென்று முதலில் பெளலிங் செய்யவே இரு அணிகளும் திட்டமிடும்.
நேருக்கு நேர் ரெக்கார்ட்:
இதுவரை 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 13 போட்டிகளில் டெல்லியும், 15 போட்டிகளில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. அதே போல, நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகள் மோதிக் கொண்ட போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றியை ஈட்டியுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
நேருக்கு நேர் மோதிக் கொண்ட போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து 7 முறை கொல்கத்தாவும், 5 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்து, இரு அணிகளும் தலா 8 முறை வெற்றி பெற்றுள்ளன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்