DC vs CSK LIVE: 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை : மாஸ் காட்டிய தோனி
IPL 2021 DC vs CSK, Qualifier 1 LIVE: ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று துபாயில் நடக்கிறது.
சென்னை அணியின் கேப்டன் தோனி 6 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் குவித்து 9வது முறையாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 13 ரன்கள் தேவைப்படுகிறது.
சென்னை அணியின் வெற்றிக்கு 18 பந்தில் 35 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டும், மொயின் அலியும் களத்தில் உள்ளனர்.
சென்னை அணி கடந்த இரண்டு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 15 ஓவர்களில் 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
டெல்லி அணிக்காக 14வது ஓவரை வீச வந்த டாம் கரனின் பந்துவீச்சில் 3வது விக்கெட்டாக ஷர்துல் தாக்கூர் தான் சந்தித்த முதல் பந்திலே ஸ்ரேயஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 37 பந்தில் 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 50 ரன்களை எடுத்துள்ளார்.
டாம் கரன் வீசிய பந்தில் உத்தப்பா அடித்த பிரம்மாண்ட ஷாட்டை பவுண்டரி லைனில் நின்று அற்புதமாக கேட்ச் செய்தார் ஸ்ரேயாஸ் அய்யர். 44 பந்தில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறியுள்ளார்.
2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்டும், ராபின் உத்தப்பாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்துள்ளனர்.
12.1 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை கடந்தது.
6-4-6-4.. அதிரடி காட்டிய உத்தப்பா .. 10 ரன் ரேட்டில் செல்லும் சென்னை அணி
5 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் சென்னை ஒரு விக்கெட் இழப்புக்கு 39
இரண்டு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 16 ரன்கள் எடுத்துள்ளது
களத்தில் ருதுராஜ் - உத்தப்பா ஜோடி நிதானமான ஆட்டத்தை தொடர முயற்சி
ஏமாற்றிய டூப்ளசிஸ் - நோர்க்யா பந்துவீச்சில் க்ளீன் போல்ட் முறையில் அவுட்
டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை குவித்துள்ளது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடனும், டாம் கரன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹெட்மயர் 28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹெட்மயர் 28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ப்ராவோ வீசிய 18வது ஓவரில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பந்தை சிக்ஸருக்கு அடிக்கும் ஆர்வத்தில் பேட்டை யே நழுவவிட்டார். பந்தும் பேட்டில் பட்டு கேட்ச்சிற்கு சென்றாலும் அந்த கேட்ச்சை தீபக் சாஹர் நழுவவிட்டார்.
டெல்லி அணி 17.3 ஓவர்களில் 150 ரன்களை கடந்துள்ளது. ரிஷப் பண்டும், ஹெட்மயரும் அதிரடியைத் தொடர்ந்து வருகின்றனர்.
டெல்லி அணியின் ரிஷப் பண்டும், ஹெட்மயரும் 40 பந்தில் 53 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அரைசதம் கண்டுள்ளனர்.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டும், ஹெட்மயரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். ஷர்துல் தாக்கூர் வீசிய 16வது ஓவரில் மட்டும் 16 ரன்கள் கிடைத்தது.
ரிஷப் பண்ட் – ஹெட்மயர் ஜோடி இணைந்து டெல்லி அணியின் ஸ்கோரை 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்து ஆடி வருகிறது. களத்தில் ரிஷப் பண்ட், ஹெட்மயர் உள்ளனர்.
டெல்லி- சென்னை அணிகள் மோதிய குவாலிபயர் போட்டியை ஒளிபரப்புவதற்காக மைதானத்தின் கூரைகளில் மிகுந்த விலை உயர்ந்த 100 கேமராக்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரித்வி ஷா 34 பந்தில் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் பாப் டுப்ளிசியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 7 பவுண்டரி 3 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
பரிசோதனை முயற்சியாக களமிறக்கப்பட்ட அக்ஷர் படேல் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் 11 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார்..
டெல்லிஅணியின் தொடக்க வீரர் பிரித்விஷா 27 பந்தில் 52 ரன்களுடன் களத்தில் அதிரடியாக ஆடி வருகிறார்
டெல்லி வீரர் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தவுடன் யாரும் எதிர்பாராத விதமாக அக்ஷர் படேல் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
டெல்லி அணியின் முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 8 பந்தில் 1 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹேசில்வுட் இரண்டாவது விக்கெட்டையும் கைப்பற்றினார்.
டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்விஷா தொடர்ந்து அதிரடியாக ஆடி வருவதால் டெல்லி அணி 5 ஓவர்களில் 50 ரன்களை எடுத்துள்ளது. பிரித்வி ஷா கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை தோனி தவறவிட்டுள்ளார்.
டெல்லி அணியின் முக்கிய வீரரான ஷிகர்தவான் ஹேசில்வுட் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் டெல்லி அணி முத் 3 ஓவர்களில் 32 ரன்களை குவித்து அதிரடியாக ஆடி வருகிறது. ப்ரித்விஷா 3வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விரட்டினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல் ரவுண்டரான ட்வெய்ன் ப்ராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இன்று 150வது போட்டியில் களமிறங்குகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சின்ன தல சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெறவில்லை. அதேபோல, டெல்லி அணியில் இளம் வீரர் ரிப்பல் படேலுக்கு பதிலாக டாம் கரன் களமிறங்கி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சின்ன தல சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெறவில்லை. அதேபோல, டெல்லி அணியில் இளம் வீரர் ரிப்பல் படேலுக்கு பதிலாக டாம் கரன் களமிறங்கி உள்ளார்.
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, டெல்லி அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -