KKR vs CSK LIVE: பிரிக்க முடியாதது - கடைசி பந்து வெற்றியும் - சிஎஸ்கேவும்! ஹாட்ரிக் வெற்றியில் சென்னை

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 26 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளது. இதில் 16 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 26 Sep 2021 07:57 PM

Background

ஐ.பி.எல். தொடரின் 38வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் மோத உள்ளது. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதற்கு முன்பு இதுவரை 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 16 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.


அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்னதாக 1 போட்டியில் மோதியுள்ளன. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடந்த 5 போட்டியில் 4 போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 4 போட்டியிலும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர். நடப்பு ஐ.பி.எல், தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது.




 


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.