2021 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்றின் கடைசி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியனஸ் அணிகள் மோதும் போட்டி அபு தாபியிலும், டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி துபாயிலும் நடைபெற உள்ளது. 


ஐபிஎல் வரலாற்றில் இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை. போட்டிகள் மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனில், சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளன.  இந்நிலையில், தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது என்றாலும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் போட்டியை எப்படி முடிக்கப்போகின்றது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 






மும்பை இந்தியன்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பு


மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில், மும்பை முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். முதலில் பேட் செய்து 200-க்கும் அதிகமான ரன்களை குவிக்க வேண்டும். இமாலய இலக்கை செட் செய்து, ஹைதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இந்த அசாத்தியமான வெற்றி சாத்தியமானால் மட்டுமே புள்ளி அடிப்படையிலும், ரன் ரேட் அடிப்படையிலும் மும்பை அணியால் கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும்!






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 9 முறையும், ஹைதராபாத் அணி 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் அபு தாபி மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு மோதியதில்லை. நடப்பு ஐபிஎல் சீசனைப் பொருத்தவரை, இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை அணியை வெற்றியை பதிவு செய்துள்ளது. 


இரு அணிகளும் மோதிக் கொண்ட் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து 5 முறை மும்பையும், 3 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் செய்து 5 முறை ஹைதராபாத் அணியும், 4 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளன.


இரு அணிகளும், இந்த சீசனில் கடைசியாக விளையாடிய போட்டியில் அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பெங்களூருவை வீழ்த்தி ஹைதராபாத்தும், ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணியும் இன்றைய போட்டியில் சந்தித்து கொள்ள இருக்கின்றது.


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண