IPL CSK vs RR :இமாலய இலக்கை எட்டிப்பிடித்த ராஜஸ்தான்...!
அபுதாபியில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் உடனடி தகவல்களை கீழே உடனுக்குடன் பெறலாம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 பந்துகள் மீதம் வைத்து 190 ரன்களை குவித்து சென்னைக்கு எதிராக இமாலய வெற்றியை பெற்றது.
சென்னை சூப்பர் கிங்சின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 20 ரன்கள் தேவைப்படுகிறது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த நிலையில் களத்தில் ஷிவம் துபேவும், கிளென் பிலிப்சும் உள்ளனர்.
சென்னை அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 30 பந்தில் 25 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. களத்தில் மிரட்டலான பேட்டிங்குடன் ஷிவம் துபேவும், சஞ்சு சாம்சனும் உள்ளனர்.
ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஷிவம் துபே 31 பந்தில் அதிரடியாக ஆடி அரைசதத்தை கடந்துள்ளார். இதுவரை அவர் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது மிரட்டலான பேட்டிங்கால் 12.4 ஓவர்களில் 151 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை குவித்துள்ளது. ஷிவம் துபேவும், கேப்டன் சஞ்சு சாம்சனும் களத்தில் ஆடி வருகின்றனர்.
சென்னை அணி 10.3 ஓவர்களில் 68 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், ராஜஸ்தான் அணி 10.3 ஓவர்களில் 122 ரன்கள் குவித்திருந்தது.
மொயின் அலி வீசிய 10வது ஓவரில் இளம் வீரர் ஷிவம் துபே இரண்டு இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 119 ரன்களை குவித்துள்ளது.
இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.1 ஓவர்களில் 101 ரன்களை கடந்துள்ளது. களத்தில் கேப்டன் சாம்சனும், ஷிவம் துபேவும் உள்ளனர்.
சென்னை அணிக்கு மரண பீதியை கிளப்பிய ஜெய்ஷ்வால் புதிய பந்துவீச்சாளர் ஆசிப் பந்தில் அவுட்டாகினார். அவர் 21 பந்தில் 50 ரன்கள் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
சென்னை அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆடி வருகின்றனர். இளம் தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 19 பந்தில் 50 ரன்களை கடந்துள்ளார். அவற்றில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். ராஜஸ்தான் அணி 5 ஓவர்களில் 75 ரன்கள் அடித்துள்ளனர்.
சென்னை அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை எடுத்துள்ளது. லீவிசும், ஜெய்ஷ்வாலும் அதிரடியாக ஆடி வருகின்றனர்.
முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். முதல் மூன்று பந்திலே ஒரு வைடுடன் சேர்த்து 15 ரன்களை ஜடேஜா விளாசினார். ஆனால், 5வது பந்தில்தான் ருதுராஜிற்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 ஓவர்களில் 167 ரன்களை குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 95 ரன்களுடன் களத்தில் உள்ளார். இறுதி ஓவரில் ருதுராஜ் சதமடிப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அரைசதத்தை கடந்த பிறகு ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது முந்தைய அதிகபட்ச ரன்னான 88 ரன்களை முந்தி இந்த போட்டியில் புதிய சாதனையை படைத்தார். மேலும், இந்த தொடரில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஆகாஷ் சோப்ரா வீசிய ஆட்டத்தின் 16வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்தார். அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்களை அடித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தான் கடைசியாக 5 போட்டிகளிலும் 30 ரன்களுக்கு அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
ராகுல் திவேதியா வீசிய ஆட்டத்தின் 15வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால், அந்த ஓவரின் 4வது பந்தில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு மொயின் அலி ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13.4 ஓவரில் 100 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது அரைசதத்தை எடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் 47 ரன்களுடனும், மொயின் அலி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200வது போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா ராகுல் திவேதியா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனிக்கு அடுத்து ரசிகர்களால் அதிகம் விரும்ப்பப்படும் வீரரான சின்ன தல சுரேஷ் ரெய்னாவிற்கு இந்த போட்டி, சென்னை அணிக்காக ரெய்னா ஆடும் 200வது போட்டி ஆகும்.
சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாப் டு ப்ளிசிஸ் ராகுல் திவேதியா பந்தில் இறங்கி ஆட முயன்று பந்தை தவறவிட்டதால் சஞ்சு சாம்சனால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால், சுரேஷ் ரெய்னா களமிறங்கியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 44 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் 20 ரன்களுடனும், பாப் டுப்ளிசிஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் பந்துவீச்சில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாப் டு ப்ளிசிஸ், ரன் எடுக்க ஓடும்போது பந்துவீசிய முஸ்தபிஷிர் ரஹ்மானுடன் மோதியதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை அணி சற்றுமுன் வரை 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அணியின் அபாகரமான ஆட்டக்காரர் டுப்ளிசிஸ் கொடுத்த கடினமான கேட்சை ராஜஸ்தான் வீரர் ப்லிப்ஸ் நழுவவிட்டார். டு ப்ளிசிஸ் 3 ரன்களுடன் ஆடி வருகிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான பேட் செய்து வரும் சென்னை அணி முதல் ஓவர் முடிவில் இரு பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் 10 ரன்களை எடுத்துள்ளார்.
அபுதாபி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கை தொடங்கியுள்ள சென்னை அணி, முதல் பந்திலே பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆகாஷ் வீசிய முதல் பந்திலே ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி அடித்துள்ளார்.
Background
ஐ.பி.எல். 2021ம் தொடரின் 47வது போட்டியில் அபுதாபி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -