MI vs PBKS Live: சொதப்பிய பஞ்சாப் ; வெற்றியை தட்டிச் சென்ற மும்பை
ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
LIVE

Background
ஐ.பி.எல். தொடரின் 41-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்குநேர் மோத உள்ளன. 6 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளதால் அந்த அணிக்கு இந்தா போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும். அதேபோல, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 14 முறையும், பஞ்சாப் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இரு அணிகளும் இன்று மோத உள்ள அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணியின் சொதப்பல் ஃபீல்டிங்கால், மும்பை அணிக்கு எளிதான வெற்றி
ஷமி வீசிய 17-வது ஓவரில் 1 பவுண்டரி அடுத்தார் ஹர்திக்
48 பந்தில் 60 ரன்கள் அடித்தா மும்பை இந்தியன்ஸ் வெற்றி
12 ஓவர் முடிவில் மும்பை 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. அந்த வெற்றி பெற 48 பந்தில் 60 ரன்கள் அடிக்க வேண்டும். களத்தில் திவாரி 33, ஹர்திக் பாண்டயா 6 ரன்களுடன் இருக்கின்றனர்.
மூன்றாவது விக்கெட்டை இழந்தது மும்பை - டி காக்கை போல்ட் ஆக்கிய ஷமி.. 10 ஓவர் முடிவில் 62/3
நிதானமாக விளையாடி வரும் மும்பை அணி மூன்றாவது விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் டி காக்கின் போல்ட் ஆக்கினார் ஷமி. 10 ஓவர் முடிவில் 62/3
Match 42. 9.5: WICKET! Q de Kock (27) is out, b Mohammad Shami, 61/3 https://t.co/jAzxzcY5x8 #MIvPBKS #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
50 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் நிதான ஆட்டம் - 94 மீட்டரில் சிக்ஸர் அடித்த திவாரி..!
ஒன்பதாவது ஓவரில் 50 ரன்கள் அடித்த மும்பை அணி, ஓவரின் முடிவில் 54 ரன்கள் எடுத்தது. திவாரி 94 மீட்டரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார்.
8 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 43-2
8 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 43-2 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார்.
பவர்பிளேயில் மும்பை இந்தியன்ஸ் அணி 30/2
பவர்பிளேயில் மும்பை இரண்டு விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 11, செளரப் திவாரி 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
.@bishnoi0056 is right at the centre of action! 👏 👏
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
The young @PunjabKingsIPL leg-spinner strikes twice in an over. 👌 👌#MI lose Rohit Sharma and Suryakumar Yadav. #VIVOIPL #MIvPBKS
Follow the match 👉 https://t.co/8u3mddWeml pic.twitter.com/GL6jXfLMd7
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த மும்பை - மிரட்டிய ரவி பிஷ்னாய்
மும்பை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவின் விக்கெட்டை எடுத்து ஸ்பீன்னர் ரவி பிஷ்னாய் மிரட்டலாக பந்து வீசினார்.
மூன்றாவது ஓவரை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்
மூன்றாவது ஓவரை அர்ஷ்தீப் சிங் சூப்பராக வீசினார். இந்த ஓவரில் மொத்தம் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
முதல் பவுண்டரியை விளாசிய ரோகித்
இரண்டாவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா பவுண்டரி அடித்தார். ஓவரின் முடிவில் 12 ரன்கள் எடுத்தனர்.
முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்த மும்பை அணி
முதல் ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.