KKR vs DC LIVE Updates: ஐபிஎல்: டெல்லி vs கொல்கத்தா: மூன்றாவது ஐபிஎல் ஃபைனலை நோக்கி கேகேஆர் !

KKR vs DC: ஐபிஎல் தொடரின் இரண்டாவது ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ABP NADU Last Updated: 13 Oct 2021 10:50 PM

Background

நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15ஆம் தேதி நடைபெறும் இறுதிப்...More

மூன்றாவது ஐபிஎல் ஃபைனல் நோக்கி கொல்கத்தா !

கொல்கத்தா அணி வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் கொல்கத்தா அணி ஐபிஎல் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். இதற்கு முன்பாக கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. மேலும் அந்த இரண்டு முறையும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.