ஐபிஎல் 2021ஆம் ஆண்டு தொடர் நேற்று இறுதிப் போட்டிடன் முடிந்தது. நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதேபோல் அதிக விக்கெட் எடுத்து பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல ஊதா தொப்பியை வென்றார். 


இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் யார்?


மேக்ஸ்வேல்:(22)




துபாயில் நடைபெற்ற ராஜஸ்தா ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியின் மேக்ஸ்வேல் ஒரே ஓவரில் 22 ரன்கள் அடித்தார். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசினார். 


 


மஹிபால்  லாம்ரோர்:(24)




துபாயில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மஹிபால் லாம்ரோர் ஒரே ஓவரில்  24  ரன்கள் அடித்தார். அந்த ஓவரில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். 


 


பிருத்வி ஷா:(24)




குஜராத் நரேந்திர மோடி  மைதானத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்க் இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிருத்வி ஷா ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசி 4 ரன்கள் அடித்தார். 


 


பேட் கம்மின்ஸ்:(30)




மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை-கொல்கத்தா போட்டியில் கம்மின்ஸ் தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 30 ரன்கள் அடித்து அசத்தினார். 


 


ரவீந்திர ஜடேஜா:(36)




சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி உட்பட 36 ரன்கள் அடித்தார். 


மேலும் ஐ.பி.எல் செய்திகளைப் படிக்க:




மேலும் படிக்க: ஐ.பி.எல்லில், அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா?