2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைய உள்ளன. இன்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 


இதில் டெல்லி, பெங்களூரு அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் கடைசி லீக் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. 13 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மேலும் 2 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நிறைவு செய்யும்.






பெங்களூரு அணியைப் பொருத்தவரை, 13 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் கூடுதலாக இருந்தால் சென்னையை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடிக்கும். எனினும், பெங்களூரு அணி புள்ளிப்பட்ட்டியலில் முன்னேற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 163+ ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அசாத்திய வெற்றி பெறுவது சற்று கடினம் என்பதால், இன்றைய போட்டி முடிவுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ள 27 போட்டிகளில், ஆர்சிபி 16 முறையும், டிசி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. அதில், டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில், இதற்கு முன்பு இரு அணிகளும் மோதிக் கொண்ட முதல் போட்டியிலும் டெல்லி அணியே வெற்றி கண்டுள்ளது.


முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி 7 முறையும், டிசி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் ரெக்கார்டை பொருத்தவரை, அதே எண்ணிக்கையில் ஆர்சிபி 7 முறையும், டிசி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண