2021 ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி போட்டிகளில், இன்று ஷார்ஜாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.  எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி ஓவரில் போட்டியை முடித்து ப்ளே ஆஃப் சீட்டை உறுதி செய்துள்ளது. இந்த சீசனில், ப்ளே ஆஃப் செல்வதை உறுதி செய்த முதல் அணியாகவும் சென்னை அசத்தியுள்ளது. 


இன்று டாஸ் வென்ற கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்டர்களில் சாஹாவைத் தவிர மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமெ எடுத்தது. 


அதனை தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு, வழக்கம்போல ரூதுராஜூம் - டுப்ளெசியும் வலுவான ஓப்பனிங் கொடுத்தனர். சிஎஸ்கே, 75 ரன்கள் எட்டும் வரை களத்தில் இருந்த இந்த இணையை, ஜேசன் ஹோல்டர் பிரித்தார். இந்த போட்டியிலும் அரை சதம் அடிப்பதை மிஸ் செய்த ருதுராஜ் 45 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


அவரை அடுத்து மொயின் அலி களமிறங்க, போட்டியின் 15வது ஓவரில், ரஷீத் கான் வீசிய பந்தில் பவுல்டாகி வெளியேறினார். 15வது ஓவரைத் தொடர்ந்து 16வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் சரிந்தது. டுப்ள்சியும், ரெய்னாவும் அவுட்டாக கடைசி ஓவர்களில் போட்டி கொஞ்சம் விறுவிறுப்பானது. இதனால், அம்பதி ராயுடுவும், தோனியும் இன்று ஃபினிஷிங் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். கடைசியில், 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் கேப்டன் தோனி. இதனால்  போட்டியை வென்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.






தோனி 100*


முன்னதாக, முதல் இன்னிங்ஸின்போது 3 கேட்சுகளைப் பிடித்தார் தோனி. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகளை எடுத்து நிறைவு செய்தார் தோனி. தனது கிரிக்கெட் கரியரில், ஐபிஎல்லில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.






விக்கெட்டுகள்: ஹேசல்வுட் - 3; ஜடேஜா- 1 ; தாகூர் -1 ; பிராவோ - 2;  தோனிக்கு 3! (கேட்சுகள்)