IPL 2021, CSK vs RCB: ஷார்ஜாவில் புழுதி புயல்... டாஸ் போடுவதில் சிக்கல்... ஓவர் குறைக்கப்பட வாய்ப்பு!

இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வந்திருந்த நிலையில், ஷார்ஜாவில் ஏற்பட்டுள்ள புழுதி புயல் காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருந்த ஐபிஎல் போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் தொடங்க உள்ளது. வழக்கமாக இந்திய நேரப்படி 7 மணிக்கு டாஸ் போடப்படும். டாஸ் போடுவதற்காக இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வந்திருந்த நிலையில், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி ஏற்பட்டுள்ள புழுதி புயல் காரணமாக டாஸ் போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், 15 நிமிடங்களுக்கு டாஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானிலையை பொருத்து பிட்ச் அறிக்கை அளிக்கப்பட்ட பின்பே, போட்டி தொடங்கப்படும் என தெரிகிறது. 

Continues below advertisement

2021 ஐபிஎல் தொடரில், தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த சீசனின் முதல் பாதி சிறப்பாக அமைந்திருந்ததால், இரண்டாம் பாதியிலும் சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள இரு அணிகளும் திட்டமிடும். 

இரண்டாம் பாதியில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது சென்னை அணி. முதல் போட்டியில், கொல்கத்தாவை எதிர்கொண்ட பெங்களூரு அணி, 92 ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியில் எளிதாக சேஸ் செய்த கொல்கத்தா, 10 ஓவர்களில் போட்டியை முடித்தது. 

கடைசி சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்று போட்டிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளதால், இந்த தொடர் தோல்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க போராடு. பெங்களூரு அணியை பொருத்தவரை, மூன்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola