CSK vs PBKS LIVE Updates: கொல்கத்தா ஓபனர் சுப்மன்கில் அரைசதம்
IPL 2021, Match 53, CSK vs PBKS: ஐ.பி.எல். தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை 13 ஓவர்களிலே பஞ்சாப் அணி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 பந்தில் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 10.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்துள்ளது. கே.எல்.ராகுல் 69 ரன்களிலும், மார்க்ரம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தீபக் சாஹர் வீசிய 9வது ஓவரில் பஞ்சாப் வீரர் ஷாரூக்கான் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்களில் வெளியேறினார்.
பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக 25 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எடுத்துள்ளார்.
பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக 25 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எடுத்துள்ளார்.
இலக்கை நோக்கி ஆடி வரும் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகிய இருவரையும் சென்னை பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் வெளியேற்றினார். பஞ்சாப் அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது.
135 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ஆடி வருகிறது. 3 ஓவர்கள் முடிவில் 27 ரன்களை பஞ்சாப் எடுத்துள்ளது. பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தனது 19வது ஓவரில்தான் தனது முதலாவது சிக்ஸரை அடித்தது. அர்ஷ்தீப் பந்தில் பாப் டுப்ளிசிஸ் அந்த சிக்ஸரை அடித்தார்.
சென்னை அணியின் தொடக்க வீரர் பாப் டுப்ளிசி பொறுப்புடன் ஆடி 46 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.3 ஓவர்கள் வரை இந்த போட்டியில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை. களத்தில் டுப்ளிசிசும், ஜடேஜாவும் உள்ளனர்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் தடுமாறி வரும் சென்னை அணி 15.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜடேஜா 10 ரன்களுடனும், டுப்ளிசி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் 61 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் தோனி 12 ரன்களில் பிஷ்னோய் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பஞ்சாப் பந்துவீச்சாளர் கிறிஸ் ஜோர்டன் தனது முதல் ஓவரில் ராபின் உத்தப்பாவை வெளியேற்றினார். இதையடுத்து, தனது இரண்டாவது ஓவரில் அம்பத்தி ராயுடுவையும் வெளியேற்றினார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் சென்னை அணி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகிறது. கிறிஸ் ஜோர்டான் வீசிய பந்தில் ராபின் உத்தப்பா 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமழிந்த சிறிது நேரத்தில் மொயின் அலியும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.
சென்னை அணியின் அதிரடி தொடக்க வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஷாரூக்கானிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்னில் வெளியேறினார். அதே சமயத்தில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சற்றுமுன்வரை 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் 9 ரன்னுடனும், பாப் டுப்ளிசிஸ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Background
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -