ஐ.பி.எல. கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை இரவு 7 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் மோதுகின்றன.ஐ.பி.எல. விளையாட்டுப் போட்டிகள் மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடக்கிறது.


இந்நிலையில், இந்த போட்டியின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி வைரலானது. 


இது குறித்து, மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் (Maharashtra Anti-Terrorism Squad (ATS)) வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும்,  வான்கடே ஸ்டேடியம், வீரர்கள் தங்க இருக்கும் டிரிடண்ட் ஓட்டல் போன்ற இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.பி.எல். நடக்கும் விளையாட்டு மைதானங்களில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக  வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்ஜய் பாண்டே, (Sanjay Pandey) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர