டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் (IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிவம் மாவி, முகமது நபியை விடுவித்தது. இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஐபிஎல் 2023 சீசனில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஐபிஎல் அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டபவர்களில் 5 வீரர்கள் ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.
1. வருண் ஆரோன்
10 ஆண்டுகளுக்கு மேலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் வருண் ஆரோன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கா 2014 சீசனில் வருண் ஆரோன் 10 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த சீசனில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக அவர் உருவெடுத்தார். எனினும், 7ஆவது ஐபிஎல் போட்டித் தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லை.
அதன் பிறகு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் விளையாடினார். கடைசியாக, நடப்பு சாம்பியனான குஜராத் டைட்ன்ஸ் அணியில் அவர் இடம்பிடித்தார். அவரை அண்மையில் தக்க வைப்பு வீரர்கள் பட்டியலில் இருந்து குஜராத் அணி விடுவித்தது. இவர் ஏலத்தில் இடம்பெறுவார் என்றாலும் இவரை வாங்க எந்த அணியும் முன்வராது என்று கூறப்படுகிறது.
2. டிம் செய்ஃபர்ட்
நியூசிலாந்தைச் சேர்ந்த டிம் செய்ஃபர்ட். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். 27 வயதான டிம், 159 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 3,143 ரன்களை விளாசியிருக்கிறார். சென்ற முறை இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. 2022 ஐபிஎல் ஆட்டத்தில் இவர் சோபிக்கத் தவறியதால், அணியிலிருந்து விடுவித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ். இவரை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் தயங்கம் என்று தெரிகிறது.
3. அஜிங்யா ரஹானே
ரன் மெஷின் என்ற அழைக்கப்படும் ரஹானே, ஐபிஎல் அறிமுகமான 2008இல் இருந்து விளையாடி வருகிறார். இதுவரை 158 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 4074 ரன்களை குவித்துள்ளார். இரு ஆட்டங்களில் சதமும் பதிவு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ரஹானே, இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்தார். அவரை தற்போது கழட்டிவிட்டுள்ளது கொல்கத்தா. ரஹானேவின் இந்த முறை எந்த அணியின் பரிசீலனையிலும் இருக்காது என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4.கிறிஸ் ஜோர்டான்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் ஜோர்டான், 2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்காக விளையாடியது. 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் ஜோர்டான், 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகளில் விளையாடியுள்ள ஜோர்டான், இந்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாடினார். அவரை விடுவித்தது சிஎஸ்கே. 34 வயதாகும் இவரையும் எந்த அணியும் வாங்குமா என்பது சந்தேகமே.
ஆரம்பிக்கலாங்களா..! "தல" தோனியுடனான புகைப்படத்தை பகிர்ந்து "ராக்ஸ்டார்" ஜடேஜா வெளியிட்ட ட்வீட்!
5. முகமது நபி
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வீரரான முகமது நபி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது முத்திரையை பதித்துள்ளார். ஆல்-ரவுண்டரான முகமது நபி, 355 ஆட்டங்களில் விளையாடி 5203 ரன்களையும், 322 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால், இந்த முறை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 37 வயதாகும் முகமது நபியும் ஏலத்தில் எந்த அணி நிர்வாகத்தாலும் வாங்கப்படமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.