ஐபிஎல் சீசன் 17:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன. இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 8 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
சென்னை - குஜராத்:
சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளுமே, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் சென்னை அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்க, குஜராத் அணி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும். நடப்பு தொடரில் ஏற்கனவே விளையாடிய போட்டியில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, அதே உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது. குஜராத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பி, பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்க தீவிரம் காட்டுகிறது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்:
நடப்பு தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அதன் பிறகு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும், சேஸிங் செய்யும் அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்)
சுப்மான் கில்(கேப்டன்), சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, கார்த்திக் தியாகி
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங்