2022 ஐபிஎல் தொடருக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இம்முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் என இரண்டு புது அணிகள் இணைந்திருப்பதால், 10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடராக நடைபெற உள்ளது.


மெகா ஏலத்தின் முதல் சுற்றில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா விலை போகவில்லை. இது ரெய்னா ரசிகர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மிஸ்டர் ஐபிஎல் என கொண்டாடப்பட்ட ரெய்னா, இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் இல்லாததது ஏமாற்றத்தை தந்தது.


குஜராத்தில் ரெய்னா ஹேஷ்டேக் டிரெண்டிங்


குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பயோபபுள் தொடர்ந்து நீடிக்க விருப்பமில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் அணி இவரை ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது ஜேசன் ராய் விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரரை அறிவிப்பது தொடர்பாக குஜராத் அணி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதனால், ட்விட்டரில் கூடிய குஜராத் அணி ரசிகர்கள், அவருக்கு பதிலாக ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். இது குறித்து குஜராத் அணி சார்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில், ராய்க்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அது ரெய்னாவாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.






சிஎஸ்கே ரெய்னாவை தேர்வு செய்யாததற்கான காரணம்


ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை 2018-ம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைத்தது. அந்த 2018-ம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் திரும்ப வந்த போது 15 போட்டிகளில் விளையாடி 445 ரன்கள் அடித்தார். எனினும் 2019-ம் ஆண்டு முதல் இவர் சொதப்ப தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் இவர் சற்று மோசமாக செயல்பட தொடங்கினார். 2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் இவர் 160 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால், இளம் வீரர்களை மாற்று வீரர்களாக கண்டுகொண்ட சிஎஸ்கே அணி, ரெய்னாவை தேர்வு செய்யவில்லை என தெரிகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண