GT vs MI, IPL 2023 LIVE: மும்பையை பழி தீர்த்த குஜராத் அணி - 55 ரன்களில் அபார வெற்றி

IPL 2023, Match 35, GT vs MI: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதும் நிலையில், போட்டி குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் ஏபிபி இணைய தளத்தில் காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 25 Apr 2023 11:24 PM
GT vs MI, IPL 2023 LIVE: மும்பையை பழி தீர்த்த குஜராத் அணி - 55 ரன்களில் அபார வெற்றி

மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - கடந்தாண்டு போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மும்பையை பழிதீர்த்தது குஜராத் 

GT vs MI, IPL 2023 LIVE: மும்பையை பழி தீர்த்த குஜராத் அணி - 55 ரன்களில் அபார வெற்றி

மும்பை அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - கடந்தாண்டு போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மும்பையை பழிதீர்த்தது குஜராத் 

GT vs MI, IPL 2023 LIVE: 5வது விக்கெட்டை இழந்த மும்பை.. தொடர்ந்து தடுமாற்றம்..!

டிம் டேவிட் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், மும்பை அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தது.

GT vs MI, IPL 2023 LIVE: ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை தூக்கிய ரஷித் கான்.. இஷான், திலக் அவுட்..!

ரஷித் கான் 8வது ஓவர் வீசி 13 ரன்களில் இஷான் கிஷன் மற்றும் 2 ரன்களில் திலக் வர்மாவை வெளியேற்றினார்.

GT vs MI, IPL 2023 LIVE: மும்பை வெற்றி பெற 84 பந்துகளில் 179 ரன்கள் தேவை..!

மும்பை அணியின் வெற்றிக்கு 84 பந்துகளில் 179 ரன்கள் தேவையாக உள்ளது. அந்த அணி 6 ஓவரில் 29 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 12 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறார். இஷான் 10 ரன்கள் எடுத்துள்ளார். 

GT vs MI, IPL 2023 LIVE: மும்பை அணி 5 ஓவர்களில் 26 ரன்கள்..!

மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேமரூன் கிரீன் 10 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இஷான் கிஷான் 9 ரன்கள் எடுத்துள்ளார்.

GT vs MI, IPL 2023 LIVE: மும்பை அணி 4 ஓவர்கள் முடிவில் 18 ரன்கள்.. தொடருமா ரன் வேட்டை..!

மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷான் 2 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகிறார். கேமரூன் கிரீன் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத் தரப்பில் ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார்.

GT vs MI, IPL 2023 LIVE: குஜராத் எதிரான போட்டி.. 3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி-6/1

குஜராத் எதிரான போட்டியில் 3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது. 

GT vs MI, IPL 2023 LIVE: மிரட்டிய மில்லர்.. தெறிக்கவிட்ட அபினவ் மனோகர்.. மும்பை அணிக்கு 208 ரன்கள் இலக்கு..!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 

GT vs MI, IPL 2023 LIVE: 150 ரன்களை தொட்ட குஜராத் டைட்டன்ஸ்.. மிரட்டும் மில்லர், அபினவ்..!

டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் அதிரடியால் குஜராத் அணி 17 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை தொட்டது. 

GT vs MI, IPL 2023 LIVE: 19 ரன்களில் காலியான விஜய் சங்கர்.. தொடர்ந்து சறுக்கும் குஜராத் டைட்டன்ஸ்..!

16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் சாவ்லா பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 

GT vs MI, IPL 2023 LIVE: அரைசதம் கடந்த கில் அவுட்.. 3 விக்கெட்டை இழந்த குஜராத் டைட்டன்ஸ்..!

34 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்த சுப்மன் கில் கார்த்திகேயா வீசிய 12வது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

GT vs MI, IPL 2023 LIVE: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி.. 11 ஓவர் முடிவில் குஜராத் அணி - 91/2.. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. 

GT vs MI, IPL 2023 LIVE: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி.. 5 ஓவர் முடிவில் குஜராத் அணி - 33/1..

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குஜராத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது. 

GT vs MI, IPL 2023 Live: முதல் விக்கெட்டை இழந்தது குஜராத் அணி

மும்பை அணிக்கெதிரான போட்டியில் குஜராத் அணியின் விருத்திமான் சஹா 4 ரன்களில்  தனது விக்கெட்டை இழந்தார். 

GT vs MI, IPL 2023 Live: மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


மும்பை - குஜராத் மோதல்:


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


மும்பை அணி நிலவரம்:


மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் கேமரூன் கிரீன், டிம் டேவிட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஆனால், மோசமான பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது.


 


சரியான டெத் பவுலர்கள் இல்லாமல் மும்பை அணி திணறி வருகிறது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்ல பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.


குஜராத் அணி நிலவரம்:


குஜராத் அணி நடப்பு தொடரில் இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தொடர் வெற்றிகளை குவித்தாலும் கடந்த சில போட்டிகளில் குஜராத் அணி சற்றே தடுமாறி உள்ளது. சுப்மன் கில், விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்க, ஷமி, ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், வெறும் 135 ரன்களை மட்டுமே அடித்தாலும் லக்னோ அணியை 128 ரன்களுக்கு சுருட்டி குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.


மைதானம் எப்படி?


நரேந்திர மோடி மைதானம் ஒரு நடுநிலையான களமாகவே உள்ளது. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நேரம் போக போக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மைதானம் செயல்படும். 175 ரன்களுக்கும் அதிகமான இலக்கு என்பது விரட்டுவதற்கு சற்றே கடினமானது தான்.


சிறந்த பேட்ஸ்மேன் - இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்


சிறந்த பந்துவீச்சாளர் - இன்றைய போட்டியில் மோகித் சர்மா பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்


வெற்றி வாய்ப்பு யாருக்கு - சேஸ் செய்யும் அணி வெற்றி பெறவே அதிகப்படியான வாய்ப்பு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.