GT vs KKR Score LIVE: கொல்கத்தாவை பழிதீர்த்த குஜராத்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

IPL 2023 GTvsKKR: ஐபிஎல் தொடரின் பலமான அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

Continues below advertisement

LIVE

Background

IPL 2023 GTvsKKR: ஐபிஎல் தொடரின் பலமான அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

ஐபிஎல் 16வது சீசன்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகள் அனைத்தும் புள்ளிப் பட்டியலில்  முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற மும்மரமாக விளையாடி வருகின்றன. இதில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் தொடர் தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.

குஜராத் கொல்கத்தா மோதல்:

மற்ற 8 அணிகளில் 4 அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அணிகளாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனும் பலமான அணியுமான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 

இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி அதில் மூன்றி மட்டுமே வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசன் கொல்கத்தா அணிக்கு ஏமாற்றத்துடன் தொடங்கியது எனலாம். பஞ்சாப் அணியுடனான மோதலில் மழை காரணமாக டக்வெர்த் - லீவிஸ்  முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்கவேண்டிய நிலை5க்கு ஆளானது. இந்த தொடரில் கொல்கத்தா பெற்ற வெற்றி என்றால் அது பெங்களூரு அணிக்கு எதிரான 2 போட்டிகளும், குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் தான்.

குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தியது கொல்கத்தா அணிக்கு பலமான விசயமாக உள்ளது. இன்று நடைபெறும் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவதால் கொல்கத்தா அணி வெற்றிக்கு தங்களை தயார் படுத்தும் பணிகளில் மும்மரமாக இருக்கிறது. பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் கொல்கத்தா அணி இன்று களமிறங்குவதால் அணியில் நம்பிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம் 

இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 

கடந்த ஆண்டு களமிறங்கி கோப்பையை தன்வசமாக்கிய குஜராத் அணி இந்த ஆண்டும் வீறுநடைபோட்டு புள்ளிப்பட்டியலில் ஏற்றத்துடன் இருக்க முனைப்பு காட்டும். இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்குச் செல்லும். மேலும் தனது சொந்த மைதானத்தில் கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்த குஜராத் அணி அதற்கு பதிலடி வழங்கும் நோக்கில் சிறப்பாக செயல்படும் எனலாம்.  

Continues below advertisement
19:49 PM (IST)  •  29 Apr 2023

புள்ளிப்பட்டியலில் முதலிடம்...

12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குஜராத் அணி

19:46 PM (IST)  •  29 Apr 2023

குஜராத் அணி அபார வெற்றி

கொல்கத்தாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்

19:44 PM (IST)  •  29 Apr 2023

விஜய் சங்கர் அரைசதம்

24 பந்துகளில் அரைசதம் விளாசினார் விஜய் சங்கர்

19:42 PM (IST)  •  29 Apr 2023

தமிழரை புரட்டி எடுத்த தமிழர்

வருண் சக்ரவர்த்தி வீசிய போட்டியின் 17வது ஓவரில் 24 ரன்கள் விளாசப்பட்டன. அதில் விஜய் சங்கர் மட்டும் 19 ரன்களை அடித்தார்

19:37 PM (IST)  •  29 Apr 2023

4 ஓவர்களில் 38 ரன்கள்

குஜராத் அணி வெற்றி பெற 4 ஓவர்களில் 38 ரன்கள் அவசியம்

19:21 PM (IST)  •  29 Apr 2023

100 ரன்களை கடந்த குஜராத்

14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை சேர்த்துள்ளது.

19:11 PM (IST)  •  29 Apr 2023

தடுமாறும் குஜராத்..49 ரன்களில் கில் அவுட்

சிறப்பாக விலையாடி வந்த கில், நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

19:06 PM (IST)  •  29 Apr 2023

கேப்டனை இழந்த குஜராத்...

குஜராத் கேப்டன் பாண்ட்யா 26 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.

19:02 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது 10 ஓவர்கள்

10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை சேர்த்துள்ளது

18:52 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது 8 ஓவர்கள்,,,

8 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை சேர்த்துள்ளது

18:45 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது பவர்பிளே...

பவர்பிளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது

18:42 PM (IST)  •  29 Apr 2023

50 ரன்களை எட்டிய குஜராத்

5.2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 50 ரன்களை கடந்துள்ளது

18:36 PM (IST)  •  29 Apr 2023

பிறந்த நாளில் அசத்தும் ரஸல்..

ரஸல் பந்துவீச்சில் சாஹா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்

18:30 PM (IST)  •  29 Apr 2023

அதிரடி காட்டும் சுப்மன் கில்..

சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 3 ஓவர்கள் முடிவில் 32 ரன்களை சேர்த்துள்ளது

18:23 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது 2 ஓவர்கள்..

2 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 13 ரன்களை சேர்த்துள்ளது

17:56 PM (IST)  •  29 Apr 2023

குஜராத்திற்கு இலக்கு என்ன?

19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 167 ரன்களை குவித்துள்ளது

17:48 PM (IST)  •  29 Apr 2023

மீண்டும் ஒரு விக்கெட்

19 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு சிங், நூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

17:46 PM (IST)  •  29 Apr 2023

ரஷீத் கானை புரட்டி எடுத்த கொல்கத்தா

ரஷித் கான் தான் வீசிய 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்

17:37 PM (IST)  •  29 Apr 2023

குர்பாஸ் ஆட்டம் முடிவுக்கு வந்தது..

அதிரடியாக விளையாடி வந்த குர்பாஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்

17:37 PM (IST)  •  29 Apr 2023

குர்பாஸ் அட்டம் முடிவுக்கு வந்தது..

அதிரடியாக விளையாடி வந்த குர்பாஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்

17:34 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது 15 ஓவர்கள்..

15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 134 ரன்களை குவித்துள்ளது

17:32 PM (IST)  •  29 Apr 2023

தடுமாறும் கொல்கத்தா அணி..

கடந்த சில ஓவர்களில் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் கொல்கத்தா திணறி வருகிறது

17:24 PM (IST)  •  29 Apr 2023

இன்னும் 7 ஓவர்களே மிச்சம்..

13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 105 ரன்களை சேர்த்துள்ளது

17:20 PM (IST)  •  29 Apr 2023

100 ரன்களை எட்டிய கொல்கத்தா

12.1 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 100 ரன்களை கடந்தது

17:13 PM (IST)  •  29 Apr 2023

வந்த வேகத்திலேயே கேப்டன் அவுட்..

கேப்டன் நிதிஷ் ராணா வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்

17:09 PM (IST)  •  29 Apr 2023

ஏமாற்றமளித்த வெங்கடேஷ் அய்யர்..

மிகவும் எதிர்பார்க்கப்பட்டவெங்கடேஷ் அய்யர் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார் 

17:07 PM (IST)  •  29 Apr 2023

10 ஓவர்கள் முடிவில் நிலைமை என்ன?

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை சேர்த்துள்ளது.

17:01 PM (IST)  •  29 Apr 2023

9 ஓவர்கள் முடிந்தது..

9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 80 ரன்களை சேர்த்துள்ளது.

17:00 PM (IST)  •  29 Apr 2023

அரைசதம் கடந்த குர்பாஸ்..

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 27 பந்துகளில் அரைசதம் விளாசினார்

16:52 PM (IST)  •  29 Apr 2023

அதிரடி காட்டும் குர்பாஸ்..

கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் குர்பாஸ் அதிரடியாக விளையாடி 40 ரன்களை கடந்துள்ளார்.

16:46 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது பவர்பிளே..

பவர்பிளே முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்களை சேர்த்துள்ளது.

16:45 PM (IST)  •  29 Apr 2023

அரைசதம் கடந்த கொல்கத்தா..

5.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 55 ரன்களை சேர்த்துள்ளது

16:42 PM (IST)  •  29 Apr 2023

அடுத்த விக்கெட்டை இழந்தது கொல்கத்தா..

ஷர்தூல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

16:39 PM (IST)  •  29 Apr 2023

கொல்கத்தாவில் பவுண்டரி மழை..!

கொல்கத்தா வீரர் குர்பாஸ் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி வருகிறார்

16:36 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது 4 ஓவர்கள்...

4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை சேர்த்துள்ளது.

16:34 PM (IST)  •  29 Apr 2023

வந்தது முதல் சிக்ஸர்..

போட்டியின் முதல் சிக்சரை விளாசினார் குர்பாஸ்

16:30 PM (IST)  •  29 Apr 2023

ஜெகதீஷன் அவுட்..

அதிரடியாக விளையாடி வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் எல்.பி.டபள்யூ முறையில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

16:25 PM (IST)  •  29 Apr 2023

வாய்ப்பை கோட்டைவிட்ட குஜராத்..

ஜெகதீஷன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அபினவ் மனோகர் தவறவிட பந்து பவுண்டரி கோட்டை தாண்டியது

16:24 PM (IST)  •  29 Apr 2023

கொல்கத்தா நிதான ஆட்டம்..

இரண்டு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 16 ரன்களை சேர்த்துள்ளது.

16:22 PM (IST)  •  29 Apr 2023

முதல் பவுண்டரி அடித்த தமிழக வீரர்

கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கியுள்ள ஜெகதீஷன், இன்றைய போட்டியின் முதல் பவுண்டரியை விளாசினார்.

16:19 PM (IST)  •  29 Apr 2023

முடிந்தது முதல் ஓவர்...

முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 ரன்களை சேர்த்துள்ளது.

16:14 PM (IST)  •  29 Apr 2023

தொடங்கியது போட்டி..

45 நிமிட தாமதத்திற்குப் பின் கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கியது

16:03 PM (IST)  •  29 Apr 2023

4.15-க்கு தொடங்குகிறது போட்டி...

மழையால் தாமதமான கொல்கத்தா - குஜராத் இடையேயான போட்டி 4.15-க்கு தொடங்குகிறது. ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது என தகவல்.

16:01 PM (IST)  •  29 Apr 2023

100வது போட்டியில் ரஸல்...

இன்றைய போட்டியின் மூலம் கொல்கத்தா அணிக்காக ரஸல் 100வது போட்டியில் களமிறங்க உள்ளார்.

15:55 PM (IST)  •  29 Apr 2023

தோல்வியில் இருந்து மீண்டு வந்த கொல்கத்தா

தொடர் தோல்விகளால் துவண்டு வந்த கொல்கத்தா அணி, கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

15:54 PM (IST)  •  29 Apr 2023

குஜராத் அடுத்தடுத்து வெற்றி..

குஜராத் அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அணி வீழ்த்தியுள்ளது.

15:47 PM (IST)  •  29 Apr 2023

குஜராத்தை வீழ்த்திய ரிங்கு சிங்..

முன்னதாக நடப்பு தொடரில் இரு அணிகளும் விளையாடிய போட்டியில், கடைசி ஓவரில்  ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களை விளாசியதன் மூலம் கொல்கத்தா அணி குஜராத் அணியை வீழ்த்தியது

15:34 PM (IST)  •  29 Apr 2023

போட்டி தொடங்குவதில் தாமதம்..

திடீரென பெய்த மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் இன்னும் வடியாததால் போட்டி தொடங்குவது தாமதமாகிறது

15:14 PM (IST)  •  29 Apr 2023

குஜராத் அணி வீரர்கள்:

ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், விஜய் சங்கர், திவேத்தியா, விரிதிமான் சாஹா, ரஷித் கான், ஷமி, மோஹித் சர்மா, நூர் அஹ்மத், ஜோஷ்வா லிட்டில்

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

சுப்மன் கில், கே.எஸ். பரத்,  சாய் சுதர்ஷன், ஷிவம் மாவி, ஜெயந்த் யாதவ்

15:13 PM (IST)  •  29 Apr 2023

கொல்கத்தா அணி வீரர்கள்:

குர்பாஸ், ராணா, ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், நரைன், வெங்கடேஷ் அய்யர், டேவிட் வீசே, ஜெகதீஷன், ஷர்தூல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

இம்பேக்ட் பிளேயர்ஸ்:

சுயாஷ் சர்மா, மந்தீப் சிங், அனுகுல் ராய், டிம் சவுதி, குல்வந்த் கெஜ்ரோலியா

15:06 PM (IST)  •  29 Apr 2023

கொல்கத்தா அணி பேட்டிங்..

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது