GT vs DC IPL 2023 LIVE: குஜராத் vs டெல்லி..சாய் சுதர்ஷன் அரைசம்.. மில்லர் அதிரடி.. குஜராத் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 7வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 04 Apr 2023 11:24 PM
குஜராத் அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அரைசதம் விளாசிய தமிழக வீரர்..

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 44 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரைசதம் விளாசினார்

அதிரடி காட்டும் மில்லர்..

இக்கட்டான சூழலில் 16வது ஓவரில் மட்டும் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் மில்லர்

30 பந்துகளில் 46 ரன்கள் தேவை..

குஜராத் அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 46 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.

முடிவுக்கு வந்தது தமிழர்களின் பார்ட்னர்ஷிப்...

பொறுப்புடன் விளையாடி வந்த விஜய் சங்கர், 29 ரன்கள் எடுத்து இருந்தபோது எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

50 ரன்களை சேர்த்த தமிழக வீரர்கள்..

சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் ஜோடி 39 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது

100 ரன்களை கடந்த குஜராத்..

சாய் சுதர்ஷன் - விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் குஜராத் அணி 12வது ஓவரில் 100 ரன்களை எட்டியது

இம்பேக்ட் ஏற்படுத்தும் விஜய் சங்கர்..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய விஜய் சங்கர், 17 பந்துகளில் 27 ரன்களை சேர்த்துள்ளார். 

முடிந்தது 10 ஓவர்கள்.. யார் கை மேலே?

163 ரன்களை துரத்தி வரும் குஜராத் அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களை சேர்த்துள்ளது.

7 ஓவர் முடிந்தது.. குஜராத் நிலை என்ன?

7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை சேர்த்துள்ளது.

களத்தில் தமிழகர்கள்.. மீளுமா குஜராத்?

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குஜராத்தின் இம்பேக்ட் பிளேயாக விஜய் சங்கர் களமிறங்கியுள்ளார். இதன் மூலம், தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் ஒரே நேரத்தில் களத்தில் விளையாடி வருகின்றனர்.

நடையை கட்டினார் கேப்டன் பாண்ட்யா..

மூன்றாவது விக்கெட்டிற்கு இறங்கி  5 ரன்கள் எடுத்து இருந்த குஜராத் கேப்டன் பாண்ட்யா, கலீல் அகமது பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

50 ரன்களை கடந்த குஜராத்

5.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 50 ரன்களை கடந்தது

நோர்ட்ஜே.. நல்லவரா? கெட்டவரா?

நோர்ட்ஜே 2 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை எடுத்து இருந்தாலும், 2 நோ பால்கள் உட்பட 20 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார்.

மிரட்டும் நோர்ட்ஜே.. சுப்மன் கில் அவுட்

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சுப்மன் கில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் சேர்த்தபோது  நோர்ட்ஜே பந்துவீச்சில் கிளீன் போல்டானார்

ஆரம்பமே அமர்க்களம் செய்த நோர்ட்ஜே

மூன்றவாது ஓவரின் முதல் பந்தில் விரிதிமான் சாஹாவை கிளீன் போல்டாக்கினார் நோர்ட்ஜே

3 ஒவர்கள் முடிந்தது..

3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை சேர்த்தது குஜராத் அணி

நம்பிக்கை தந்த அக்சர் படேல்

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்த டெல்லி அணிக்கு , 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் உட்பட 36 ரன்களை அதிரடியாக சேர்த்து அக்சர் படேல் நம்பிக்கை அளித்தார். 

பந்துவீச்சில் மிரட்டிய குஜராத் அணி

குஜராத் அணி சார்பில் ஷமி மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அல்ஜாரி ஜோஷப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்


 

குஜராத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

குஜராத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

150 ரன்களை எட்டிய டெல்லி

7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை கடந்தது டெல்லி அணி

இறுதி கட்டத்தில் சிக்சர்களும் விக்கெட்டும்

18 மற்றும் 19வது ஓவர்களில் அடுத்தடுத்து அக்ஸர் படேல் மற்றும் அமன் கான் அடுத்தடுத்து சிக்சர் விளாசினர். ஆனால், 19வது ஓவரில் அமன் கான் தனது விக்கெட்டை இழந்தார் 

மாரத்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது..

34 பந்துகளில் 30 ரன்களை சேர்த்து இருந்த ஷர்ப்ராஸ் கான், ரஷித் கான் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

அக்சர் படேல் அடித்த சிக்ஸர்..

15வது ஓவரின் கடைசி பந்தில் அக்ஸர் படேல் அடித்த சிக்ஸர் மூலம், டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எட்டியுள்ளது.

வந்ததும் ஆரம்பித்த ரஷித் கான்..

போட்டியின் 13வது ஓவரை வீசிய ரஷித் கான், அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் போரலின் விக்கெட்டை போல்ட் முறையில்  வீழ்த்தினார். இந்த போட்டியில் ரஷித் கான் வீசிய முதல் ஓவர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

100 ரன்களை எட்டிய டெல்லி அணி..

12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 100 ரன்களை எட்டியது.

கோட்டை விட்ட குஜராத் வீரர்...

யாஷ் தயாள் பந்துவீச்சில் ஷர்பராஷ் கான் அடித்த பந்து பல அடி உயரம் ஏறி இறங்கிய நிலையில், எளிமையான கேட்ச் வாய்ப்பை குஜராத் வீரர் ஜோஸ்வா லிட்டில் நழுவவிட்டார் 

10 ஓவர்கள் முடிந்தது.. யார் கை ஓங்கியுள்ளது?

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்களை எடுத்துள்ளது. குஜராத் சார்பில் ஷமி மற்றும் அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

4வது விக்கெட்டை இழந்த டெல்லி

வார்னர் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய ரூஸ்ஸோ, அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தில் கேட்ச் முறையில் டக்-அவுட் ஆனார்

ஸ்டம்புகள் சிதற விக்கெட்டை பறிகொடுத்த வார்னர்

அல்ஜாரி ஜோசப் வீசிய 9வது ஓவரின் 2வது பந்தில் டேவிட் வார்னர் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களை சேர்த்தார்.

வேகத்தை கூட்டுமா டெல்லி அணி?...

போட்டியின் முதல் 8 ஒவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்துள்ளது.

டேவிட் வார்னர் பொறுப்பான ஆட்டம்

டெல்லி அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் வார்னர் பொறுப்புடன் விளையாடி வருகிறார். இதுவரை அவர் 30 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்களை சேர்த்துள்ளார்.

பவர்பிளே முடிந்தது.. யாருக்கு சாதகம்?

பவர்பிளே முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது. குஜராத் சார்பில் ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2வது விக்கெட்டை இழந்த டெல்லி..

4 ரன்கள் எடுத்து இருந்த மிட்செல் மார்ஷ், முகமது ஷமி பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்..  

4 ஓவர் முடிவில் டெல்லி அணி நிலவரம்..

4 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை எடுத்துள்ளது

முதல் விக்கெட்டை இழந்த டெல்லி அணி...

5 பந்துகளில் 7 ரன்களை சேர்த்த பிரித்வி ஷா,  முகமது ஷமி பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டனார்.

அடித்து ஆடும் டெல்லி

2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்ப்பு

எக்ஸ்ட்ராக்களை வாரிக்கொடுத்த ஷமி...

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்  முதல் ஓவரிலேயே 7 ரன்களை எக்ஸ்ட்ரா முறையில் வாரி வழங்கினார் ஷமி

போட்டியின் முதல் ஓவர்...

போட்டியின் முதல் ஓவரை முகமது ஷமி வீச, வார்னர் எதிர்கொள்கிறார்.. 

பழிவாங்குமா வார்னர் படை?...

கடந்த ஆண்டு லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, இந்த போட்டியில் வென்று டெல்லி அணி பழிவாங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

குஜராத் அணி பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன்,  டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்

டெல்லி அணி பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ப்ராஸ்கான் (விக்கெட் கீப்பர்), போரல், அமன் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரோர்ட்ஜே, லலித் யாதவ்,

டாஸ் வென்றது குஜராத் அணி..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 7வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


16வது ஐபிஎல் சீசன்:


கடந்த மார்ச் 31 ஆம் தேதி   16வது ஐபிஎல் சீசன் கோலாகலமாக தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை, குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதனிடையே இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்  நடைபெறும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் ஒளிபரப்படுகிறது. 


வெற்றி பெறும் முனைப்பில் அணிகள் 


டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் லக்னோ அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் கேப்டன் வார்னர் தவிர்த்து  மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை சேர்க்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அந்த அணியில் பெரிய அளவில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இல்லை. இதனிடையே சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டி அந்த அணிக்கு கூடுதல் பலமாக அமையும். 


அதேசமயம் குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் சுப்மன் கில், விருத்திமான் சஹா ஆகியோர் சிறப்பாக ஆடினர். ஆனால் அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. 


இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது. இதனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மைதானம் எப்படி? 


இந்தியாவின் மிகப் பழமையான மைதானங்களில் ஒன்றாக அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரே நேரத்தில் 55 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது சற்று சிரமமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. பவுண்டரி எல்லைகள் மிக அருகில் இருப்பதால் இந்த போட்டியில் நிறைய பவுண்டரிகளை எதிர்பார்க்கலாம். இங்கு முதலில் பேட் செய்யும் அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 195 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மைதானத்தில் இரண்டாவது பேட் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 70 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் மட்டுமே வெற்றிகளைப் பெற்றுள்ளது. 


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 


டெல்லி அணி:  டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ப்ராஸ் கான், ரோவ்மன் பவெல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், கலீல் அகமது, முகேஷ் குமார்


குஜராத் அணி: விருத்திமான் சஹா, ஷுப்மன் கில், மேத்யூ வேட், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் ஷங்கர், ராகுல் திவேடியா, ரஷித் கான், முகமது ஷமி, சிவம் மாவி, அல்சாரி ஜோசப்


தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் யார்? 


டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை மனிஷ் பாண்டே, லலித் யாதவ், அபிஷேக் போரல் மற்றும் கமலேஷ் நாகர்கோடி ஆகியோரை தங்கள் இம்பாக்ட் வீரர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜெயந்த் யாதவ், கே.எஸ்.பாரத், மோகித் சர்மா, அபினவ் மனோகர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.