2022 ஐபிஎல் தொடருக்கு முன்னால், வீரர்களை தேர்வு செய்வதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இம்முறை 2 அணிகள் புதிதாக சேர்க்கபப்ட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. இந்நிலையில், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றிருந்தனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டில் இருந்து 30 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், 14 பேர் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


2022 ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு என 8 அணிகளில் தமிழ்நாடு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் மட்டும் ஒரு தமிழ்நாடு வீரர் கூட தேர்வு செய்யப்படவில்லை.


இந்நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் அசத்த இருக்கும் தமிழ்நாடு வீரர்கள் யார்? முழு விவரம் இதோ:


சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹரி நிஷாந்த், ஜெகதீசன்


ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஹேர்வு செய்யப்பட்டிருந்த இந்த இரு வீரர்கள் மீண்டும் சென்னை அணியால் எடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்டரான ஜெகதீசனும், பேட்டரான ஹரி நிஷாந்தும் யெல்லோ ஜெர்சியில் தொடர உள்ளனர்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பாபா இந்திரஜித், வருண் சக்கிரவர்த்தி


பேட்டரான பாபா இந்திரஜித், சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கிரவர்த்தி ஆகியோரை கொல்கத்தா அணி எடுத்திருக்கிறது. ஏற்கனவே கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் வருண், மீண்டும் அதே அணியால் எடுக்கப்பட்டுள்ளார்.


ராஜஸ்தான் ராயல்ஸ் - ரவிசந்திரன் அஷ்வின்


தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களில் சீனியரான அஷ்வின், சென்னை, பூனே, பஞ்சாப், டெல்லி அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். இம்முறை சென்னை அணியில் இடம் பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


குஜராத் டைட்டன்ஸ் - சாய் கிஷோர், விஜய் சங்கர், சாய் சுதர்ஷன்


சென்னை அணியில் இருந்த சாய் கிஷோர், ஹைதராபாத் அனியில் இருந்த விஜய் சங்கர் ஆகியோர் இப்போது குஜராத் அணிகாக விளையாட உள்ளனர். ஐபிஎல் தொடரில் அறிமுக சீசனில் விளையாட இருக்கிறார் சாய் சுதர்ஷன்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - வாஷிங்டன் சுந்தர், நடராஜன்


ஹைதராபாத் அணியில் கலக்கிய நடராஜன் மீண்டும் அதே அணியில் எடுக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் அசத்தி வந்த வாஷிங்டன் சுந்தரை ஹைதராபாத் தூக்கி இருக்கிறது.


மும்பை இந்தியன்ஸ் - முருகன் அஷ்வின், சஞ்சய் யாதவ்


பஞ்சாப் கிங்ஸ் - ஷாரூக்கான்


இந்த ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர தமிழ்நாடு வீரர் என்றால் அது ஷாரூக்கான்தான். ஷாரூகானை வாங்க அணிகள் போட்டி போட்ட நிலையில், கடந்த சீசன் அவரை எடுத்திருந்த பஞ்சாப் அணி மீண்டும் அணியில் எடுத்திருக்கிறது


ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - தினேஷ் கார்த்திக்


கொல்கத்தா கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், அதே அணியில் தக்க வைக்கப்படவில்லை. ஏலத்தில் பங்கேற்றிருந்த தினேஷ் கார்த்திக்கை சென்னை அணி எடுக்க முயற்சி செய்தது. இறுதியில் பெங்களூர் அணி தட்டித்தூக்கியது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண