ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 224 வீரர்கள் ஏலத்தில் சென்றுள்ளனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்தப்படியாக பஞ்சாப் அணி ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் பல ஆச்சரியமூட்டும் அறிடப்படாத வீரர்களையும் ஐபிஎல் அணிகள் ஏலத்தில்ன் எடுத்துள்ளது. அதில் மும்பை இந்தியண்ஸ் ராபின் மின்ஸ் என்கிற பழங்குடியன வீரரை ஏலத்தில் எடுத்துள்ளது அவர் யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
ராபின் மின்ஸ்:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராபின் மின்ஸ் கடந்த 2024 சீசனில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு சாலை விபத்தில் சிக்கினார். ராபின் மின்ஸ்சின் தந்தை பிரான்சிஸ் சேவியர் மின்ஸ் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இந்திய இரணுவத்தில் 24 ஆண்டுகளாக பிகார் படைப்பிரிவில் பணியாற்றிய அவர் ஓய்வு பெற்ற பிறகு ராஞ்சி விமான நிலையத்தில் பாதுக்கப்பு காவலராகப் பணியாற்றி வருகிறார்.
தோனியுடன் ஒற்றுமை:
ராபின் மின்ஸ், எம்.எஸ் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். மேலும் இருவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உள்ளன. தோனியை போன்றே ராபினும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தோனியை போலவே மிகப்பெரிய சிக்சர்களை அடிக்கும் திறமை ராபினிடம் உள்ளது. எம்.எஸ் தோனி கிரிக்கெட்டில் அறிமுகமான போது 12ஆம் தேர்வாகி படிப்பை தொடர முடியவில்லை. அதே போல ராபினும் தனது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சிக்கு பிறகு கிரிக்கெட்டில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: IPL 2025 MI Squad: மீண்டும் கடப்பாரையா? சிஎஸ்கேவிற்கு டஃப் கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ்? பிளேயிங் லெவன் எப்படி இருக்கு..!
பட்டை தீட்டுமா மும்பை:
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அவரை 65 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது . ஜார்க்கண்ட் அணியின் கிறிஸ் கெய்ல் என்ற செல்லமாக அழைக்கப்படுகிறார் ராபின் மின்ஸ். இந்த ஆண்டில் நடைப்பெற்ற சி.கே நாயுடு கோப்பையில் சிறப்பாக விளையாடி மும்பை அணியின் நன்மதிப்பை பெற்றார் ராபின் மின்ஸ். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஏலத்தில் எடுத்தும் விபத்தில் சிக்கி காயத்தில் மீண்ட ராபினை மும்பை இந்தியண்ஸ் கடந்த ஓரண்டாக பயிற்சி அளித்து வந்தது. இந்த நிலையில் தான் ராபின் மின்ஸ்சை மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
பொதுவாகவே மும்பை இந்தியன்ஸ் அணி இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அந்த தற்போது மும்பை பட்டரையில் மீண்டும் ஒரு இளம் வீரரை அணியில் எடுத்து பட்டைன் தீட்டி நிச்சயம் நல்ல வீரராக மாற்றும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.