வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு திரும்புவது புத்திசாலித்தனம் அல்ல என்றும், இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல்களால் ஏற்படும் தற்போதைய சூழ்நிலையில் பணத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2025:
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் எல்லையில் ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லையில் துப்பாக்கி சூடு மற்றும் ட்ரொன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வீரர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் மே 9 ஆம் தேதியுடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு மே 10 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தணிந்து அமைதியான சூழல் ஏற்ப்பட்டது, இதனால் மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி படி நாளை(மே 17) ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளது.
மிட்செல் ஜான்சன்:
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சளாரான மிட்சேல் ஜான்சன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டாம் என பேசியுள்ளார், இது குறித்து பேசிய அவர்
"இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பணம் வருகிறது, ஆனால் அது இன்னும் ஒரு விளையாட்டுதான், இந்த வாரம் இந்தியன் பிரீமியர் லீக்கி இடைவேளைக்குப் பிறகு தொடங்க உள்ளது, இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று மீதமுள்ள போட்டியை முடிக்க வேண்டுமா என்று நான் முடிவு செய்ய வேண்டியிருந்தால், அது ஒரு எளிதான முடிவாக இருக்கும். அது எனக்குப் பிடிக்கவில்லை. உயிரும் எனது பாதுகாப்பும் மிக முக்கியமான விஷயம், எனக்கு பணம்," மிட்செல் ஜான்சன் கூறினார்.
திருத்தப்பட்ட அட்டவணை, ஐபிஎல் பிளே-ஆஃப்களில் பங்கேற்க முடிவு செய்யும் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு, ஜூன் 11 முதல் லார்ட்ஸில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்கு குறுகிய நேரம் மட்டுமே உள்ளது.
விரிவான ஆலோசனைகளை நடத்தி, அரசாங்கத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இறுதிப் போட்டியை முதலில் திட்டமிடப்பட்ட மே 25 இல் இருந்து ஜூன் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.]
நாளை மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பெங்களூரு சின்ன்சாமி மைதானத்தில் மோதவுள்ளது.