ஐ.பி.எல் 2024:


ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 35 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 20) நடைபெற்று வருகிறது. இதில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. அந்த வகையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


 


அதிரடி பேட்டிங்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார்கள். இருவரின் ஆட்டமும் டெல்லியை மிரட்டியது. ட்ராவிஸ் ஹெட் இன்றைய போட்டியிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். அந்த வகையில் அதிவேக அரைசதம் அடித்த அணி, அதிவேக சதம் அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றது.  வெறும் 16 பந்துகளிலேயே ஹைதராபாத் அணி 52 ரன்களை கடந்தது. 


அசத்திய ட்ராவிஸ் ஹெட்:


மறுபுறம் 16 பந்துகளில் தன்னுடைய ஐ.பி.எல் அரைசதத்தை பதிவு செய்தார் ட்ராவிஸ் ஹெட். அந்த வகையில் 16 பந்துகளில்  7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மார்க்கரம் மற்றும் கிளாசென் ஆகியோரும் விக்கெட்டுகளை பறிகொடுக்க அப்போதில் இருந்து ரன்வேட்டையை கட்டுக்குள் கொண்டு வந்தது டெல்லி அணி. மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற ட்ராவிஸ் ஹெட் 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 89 ரன்களை குவித்தார். 


பின்னர் வந்த நிதிஷ் குமார் மற்றும் சக்பாஷ் அகமது இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதில் சக்பாஷ் அகமது அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்கள் எடுத்துள்ளது. 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியுள்ளது.