DC Vs RR,IPL 2022 LIVE:கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்... டெல்லி அணி போராடி தோல்வி !
DC Vs RR,IPL 2022 LIVE: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
டெல்லி கேபிடல்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.
17 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணி வெற்றி பெற 24 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்படுகிறது.
14 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
12 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 9 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. முதல் 3 ஓவர்களில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 2 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் டெல்லி அணி 8 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 155 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 12 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களை எடுத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் 3ஆவது முறையாக அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.
Background
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடர் தொடங்கியது முதல் இரு அணிகளும் பலமிகுந்த அணிகளாக வலம் வருகின்றன.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணிக்கு மிகப்பெரிய பலமே ஜோஸ் பட்லர்தான். தொடக்கம் முதல் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு தேவ்தத் படிக்கல் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம், அவரும் பார்முக்கு திரும்பிவிட்டால் ஸ்கோர் எகிறும். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இதுவரை தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அவர் அதிரடியை வெளிப்படுத்தினால் நிச்சயம் ராஜஸ்தான் இமாலய இலக்கை குவிக்கும்.
இரு அணிகளுக்கும் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் தலா 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. வான்கடேவில் மோதிய 2 போட்டியிலும் ராஜஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 2 தோல்வியுடன் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 6 போட்டிகளில் ஆடி 3 வெற்றி 3 தோல்விகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனால், புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற முனைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -