DC vs RR Live Score: 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்... வெற்றியோடு முதலிடம் சென்றது டெல்லி!

IPL 2021 DC vs RR Live Score : ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 36வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியினரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றனர்.

சுகுமாறன் Last Updated: 25 Sep 2021 07:24 PM
ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணிக்கு அடுத்த வெற்றி...!

டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்களை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை மட்டுமே 20 ஓவர்கள் முடிவில் எடுத்தது. இதனால், டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் முன்னேறியது. 

12 பந்துகளில் 54 ரன்கள்...! தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்..!

டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், தற்போது 12 பந்துகளில் 54 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் ராஜஸ்தான் உள்ளது. அந்த அணியின் கேப்டன் சாம்சன் 53 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

சாம்சனின் பார்ட்னரை காலி செய்த நோர்ட்ஜே..!

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனி ஆளாக போராடி வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு துணையாக ஆடிய ராகுல்திவேதியா வேகப்பந்துவீச்சாளர் நோர்ட்ஜே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதத்தை கடந்தார்....! விறுவிறுப்பான கட்டத்தில் ஆட்டம்...!

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடி வரும் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனி ஆளாக போராடி அரைசதத்தை கடந்தார். அவர் 39 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் அணி தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களை எடுத்துள்ளது. ராஜஸ்தான் வெற்றிக்கு 22 பந்தில் 60 ரன்கள் தேவைப்படுகிறது. 

அதிரடி ஆட்டத்தை தொடங்கி சாம்சன்...!

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 36 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால், சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வருகிறார். அவர் 34 பந்தில் 6 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ராஜஸ்தான் வெற்றிக்கு 30 பந்தில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. 

ராஜஸ்தானுக்கு தேவை 36 பந்துகளில் 87 ரன்கள்...! சாத்தியமாக்குவாரா சாம்சன்..!

ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 5 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 87 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் சஞ்சு சாம்சனும், ராகுல் திவேதியாவும் உள்ளனர். 

5வது விக்கெட்டையும் காலி செய்தது டெல்லி..! பார்டனர் இல்லாமல் போராடும் சாம்சன்...!

டெல்லி அணியினரின் சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர். மகிபால் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் 2 ரன்களே எடுத்த நிலையில், அக்ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது ராஜஸ்தான் அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

51 பந்துகளுக்கு 100 ரன்கள் தேவை...!

டெல்லி அணியின் பந்துவீச்சில் தடுமாறி வரும் ராஜஸ்தான் அணி, 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் போராடி 12வது ஓவரில் போராடி 50 ரன்களை கடந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 51 பந்தில் 100 ரன்கள் தேவைப்படுகிறது. 

4வது விக்கெட்டையும் இழந்தது ராஜஸ்தான்...!

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அணியை அழைத்துச் செல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட சாம்சன் - மகிபால் ஜோடிக்கு ரபாடா முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்தில் மகிபால் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

10 ஓவர்களுக்கு 48 ரன்கள்...! காப்பாற்றுமா சாம்சன் - மகிபால் ஜோடி...!

ராஜஸ்தான் அணி தற்போது வரை 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களை எடுத்துள்ளது. அணியை இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் சஞ்சு சாம்சனும், மகிபாலும் போராடி வருகின்றனர். 

8வது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்த ராஜஸ்தான்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 28 ரன்களே எடுத்திருந்த நிலையில், அந்த அணிக்கான முதல் பவுண்டரியை அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 8வது ஓவரில் அடித்துள்ளார். 8 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 34 ரன்களை எடுத்துள்ளது. 

7 ஓவர்களுக்கு 28 ரன்கள்...! மீண்டு வருமா ராஜஸ்தான்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது வரை 7 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 78 பந்துகளில் 129 ரன்கள் தேவைப்படுகிறது. 

5 ஓவருக்கு வெறும் 20 ரன்கள்...! காப்பாற்றுவாரா சஞ்சு சாம்சன்..!

டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன் 5 ரன்களுடனும், மகிபால் லாம்ரோர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள்...! ராஜஸ்தான் தடுமாற்றம்...!

டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் லிவிங்ஸ்டன் 1 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 5 ரன்னிலும், டேவிட் மில்லர் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், ராஜஸ்தான் அணி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

முக்கிய இரு விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான்

ரன்களை வாரி இறைத்த கார்த்தி தியாகி...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி இந்த ஆட்டத்தில் தான் வீசிய முதல் பந்திலே ஷிகர்தவானை போல்டாக்கியதால் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை வாரி இறைத்தார். இதனால்தான் டெல்லி அணி எளிதில் 150 ரன்களை கடக்க முடிந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 155 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது டெல்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து  154 ரன்களை எடுத்தது.

6 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி...!

டெல்லி அணியின் ஹெட்மயருக்கு பிறகு ஆட்டமிழந்த அதிரடியை தொடங்கிய அக்‌ஷர் படேல் 7 பந்துகளில் 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்துள்ளது. 

அதிரடி காட்டிய ஹெட்மயரை வெளியேற்றிய முஸ்தபிஷீர்...! தடுமாறும் டெல்லி..!

டெல்லி அணியின் ஸ்கோரை அதிரடியாக ஆடி உயர்த்திக் கொண்டிருந்த ஹெட்மயர் முஸ்தபிஷீர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

டெல்லி அணி வீரர் ஹெட்மயர் அதிரடி...!

டெல்லி அணியின் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்ததால் களத்தில் உள்ள அதிரடி வீரர் ஹெட்மயர் அதிரடியாக ஆடி வருகிறார். ஆட்டம் முடிய இன்னும் 4 ஓவர்களே உள்ளதால் அவர் அதிரடியில் இறங்கியுள்ளார். அவர் சற்றுமுன் வரை 13 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 24 ரன்களை எடுத்துள்ளார். 

15 ஓவர்களில் சதத்தை கடந்தது டெல்லி அணி...!

டெல்லி அணி தற்போது வரை 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை எடுத்துள்ளது. களத்தில் ஹெட்மயரும், லலித் யாதவும் உள்ளனர். 

நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யரை காலி செய்த ராகுல் திவேதியா...!

டெல்லி அணியின் ஸ்கோரை அதிரடியாக ஆடி உயர்த்திக் கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் ராகுல் திவேதியா பந்துவீச்சில் 32 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

13 ஓவர்களுக்கு 90 ரன்களை குவித்தது டெல்லி...!

டெல்லி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணி 13 ஓவர்களில் 90 ரன்களை குவித்துள்ளது. 

ரிஷப்பாண்ட் அவுட்

டெல்லி கேபிடல் அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் 24 பந்தில் 24 ரன்கள் அடித்திருந்த நிலையில் முஷ்டபிர் ரஹ்மான் பந்துவீச்சில் போல்டு ஆனார். தற்போது டெல்லி அணி 86/3 ரன்கள் எடுத்துள்ளது. 

9 ஓவர்களுக்குள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

பலம் மிகுந்த டெல்லி அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சுசாம்சன் 9 ஓவர்களுக்குள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளார். முஸ்தபிர் ரஹ்மான், மகிபால் லோம்ரார், சேட்டன் சக்காரியா, கார்த்திக் தியாகி, தப்ரைஸ் சம்ஷி, ராகுல் திவேதியா ஆகியோர் பந்துவீசியுள்ளனர்.

அரைசதத்தை கடந்தது டெல்லி அணி...! சரிவில் இருந்து மீட்கும் ஸ்ரேயாஸ், ரிஷப்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி சற்று முன் வரை 9 ஓவர்கள் முடிவில் ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்  17 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களையும் எடுத்துள்ளனர். 

கேப்டனும், முன்னாள் கேப்டனும் நிதான ஆட்டம்...!

டெல்லி அணி 7 ஓவர்கள் முடிவில் 42 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்டும், முன்னாள் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 

பிரித்வி ஷாவும் அவுட்...! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் டெல்லி...!

டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவான் அவுட்டாகிய சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரரான பிரித்விஷாவும் சேட்டன் சக்காரியா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்து வெளியேறியுள்ளார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளதால் டெல்லி அணி தடுமாறி வருகிறது. 5 ஓவர்களுக்கு 25 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

கார்த்திக் தியாகியின் முதல் பந்திலே ஸ்டம்பை பறிகொடுத்த தவான்

டெல்லி அணியின் முக்கிய வீரரான ஷிகர்தவானை தான் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கார்த்திக் தியாகி போல்டாக்கினார். 

3 ஓவர்களுக்கு 18 ரன்களை எடுத்துள்ளது டெல்லி அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியினர் தற்போது 3 ஓவர்கள் முடிவில் 18 ரன்களை எடுத்துள்ளனர். ஷிகர் தவான் 8 ரன்களையும், பிரித்வி ஷா 10 ரன்களையும் எடுத்துள்ளார். 

Background

அபுதாபியில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் மோதுகின்றனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.