IPL 2023 RCB vs DC LIVE : பெங்களூரு வெற்றி.. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி; புள்ளிப்பட்டியலில் கடைசியில் தள்ளாடும் டெல்லி..!
DC vs RCB Score Live: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி தனது 9வது விக்கெட்டை 18 வது ஓவரில் இழந்துள்ளது. அமன் கான் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் லலித் யாதவ் தனது விக்கெட்டை வைஷாக் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் டெல்லி அணி 15 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த மனீஷ் பாண்டே அரைசதம் விளாசிய அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் மனீஷ் பாண்டே 37 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார்.
டெல்ல்லி அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த அக்ஷர் பட்டேல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் 14 பந்தில் 21 ரன்கள் சேர்த்து இருந்தார்.
நிதானமாக ஆடி வரும் டெல்லி அணி 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 10 ஓவர்களில் 118 ரன்கள் தேவை. ஆனால் கைவசம் ஐந்து விக்கெட்டுகள் தான் உள்ளது.
ஏற்கனவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த டெல்லி அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. அபிஷேக் போரோல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதிரடி ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி நிதானமாக ரன் சேர்த்து வருகிறது. இந்த அணி 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளேவில் விக்கெட் வேட்டை நடத்திய பெங்களூரு அணி 32 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது.
சிறப்பாக ஆடிவந்த டேவிட் வார்னர் தனது விக்கெட்டை விஜயகுமார் வைஷாக் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் 13 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார்.
விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் டெல்லி அணியின் கேப்டன் வார்னர் ஐந்தாவது ஓவரின் கடைசி மூன்று பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அதகளப்படுத்தியுள்ளார்.
டெல்லி அணியின் முதல் பவுண்டரியை மனிஷ் பாண்டே 4வது ஓவரின் ஐந்தவது பந்தில் அடித்துள்ளார். இந்த ஓவர் முடிவில் டெல்லி அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணியை தனது பந்து வீச்சில் மிரட்டி வரும் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் 4 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளியுள்ளது.
மூன்றாவது ஓவரில் டெல்லி அணியின் யாஷ் துல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். தற்போது டெல்லி அணி அணி இரண்டு ரன்களுக்கு 3 விக்கெட்டினை இழந்துள்ளது.
டெல்லி அணி 2 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து இரண்டு ரன்கள் சேர்த்து மிக மோசமான நிலையில் உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்ஷெல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்துள்ளது.
டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேட்யரான ப்ரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ரன் - அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.
கடந்த சில ஓவர்களாக ரன் எடுக்க தடுமாறிய பெங்களூரு அணி 19வது ஒவரில் பவுண்டரிகளை விரட்டியது. இதனால், 166- 6.
பெங்களூரு அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 139 - 6.
டெல்லி அணியின் மிரட்டலான பந்து வீச்சினால் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக பந்து வீசி வரும் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தினேஷ் கார்திக் கோல்டன் டக் ஆகி வெளியேறியுள்ளார்.
அதிரடியாக ஆடிவந்த மேக்ஸ்வெல் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 14 பந்தில் 24 ரன்கள் சேர்த்து இருந்தார்.
சிக்ஸர் பறக்கவிட்ட ஹர்ஷல் பட்டேல் 14வது ஓவரின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த ஓவர் முடிவில் பெங்களூரு அணி 132- 4.
களத்தில் உள்ள ஹர்ஷல் பட்டேல் மற்றும் மேக்ஸ்வெல் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டனர்.
13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
ஒன் - டவுனாக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த மகிபால் லோம்ரோர் 18 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
12வது ஓவரில் நிதானமாக ஆடிய பெங்களூரு அணி அந்த ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்துள்ளது.
விராட் கோலி விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய மேக்ஸ் வெல் இரண்டு சிக்ஸர் விளாசியுள்ளார். 11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் குவித்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த விராட் கோலி லலித் யாதவ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இவர் 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து இருந்த் நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
அதிரடியாக ஆடி வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் 47வது அரைசதத்தினை எட்டியுள்ளார். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 89 ரன்கள் குவித்துள்ளது.
சுழல் பந்து வீச்சை நிதானமக எதிர்கொள்ளும் பெங்களூரு அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதலே சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் டெல்லி அணி பவர்ப்ளேவிற்குப் பிறகு பெங்களூரு அணிக்கு பெரும் சவால் அளித்து வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
ஒரு விக்கெட்டை இழந்தாலும் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் 47 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐந்து ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த டூ பிள்சிஸ் மிட்ஷெல் மார்ஸ் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் 16 பந்தில் 22 ரன்கள் சேர்த்து இருந்தார்.
இந்த போட்டியின் முதல் சிக்ஸரை டூ பிளசிஸ் அக்ஷர்பட்டேல் வீசிய 4வது ஓவரில் விளாசியுள்ளார். இந்த ஓவர் முடிவில் பெங்களூரு அணி 33 - 0 .
இரண்டாவது ஓவரில் நிதானமாக ஆடிய டூ பிளஸ்சிஸ் மூன்றாவது ஓவரில் பவுண்டரிகளை விரட்டி அதிரடியாக ஆடினார். மூன்றாவது ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் குவித்துள்ளது.
இரண்டாவது ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணியின் விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி பெங்களூரு அணியின் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். முதல் ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது.
Background
ஐபிஎல் 2023 சீசனின் 20வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் சின்னசாமி மைதானத்தில் மோத இருக்கிறது. இந்த இரண்டு அணிகளின் புள்ளி பட்டியல் விவரங்களை கீழே காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த சீசனை தொடங்கியது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தனர்.
அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்தாண்டு மோசமான பார்முடன் தொடங்கியது. இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் தோல்வியை சந்தித்தது. எனவே, இன்றைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முயற்சியில் களமிறங்கும்.
நேருக்கு நேர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக பெங்களூர் அணி 18 முறையும், டெல்லி கேபிடல்ஸ் அணி 10 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு மட்டும் முடிவு இல்லை.
கடந்த 2020 ஆண்டு சீசனில் இருந்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது இல்லை. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியே வெற்றிபெற்றுள்ளது.
- ஒட்டு மொத்தமாக விளையாடிய போட்டிகள் - 29
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வென்ற போட்டிகள் - 18
- டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகள் - 10
- முடிவு இல்லாத போட்டிகள் - 1
பெங்களூர் மைதானம் யாருக்கு சாதகம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பெங்களூர் மைதானத்தில் இந்த இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பெங்களூர் அணி 6 முறையும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதில் ஒன்று முடிவு இல்லாமல் முடிந்தது.
- பெங்களூர் மைதானத்தில் விளையாடிய போட்டிகள் - 11
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வென்ற போட்டிகள் - 6
- டெல்லி கேபிடல்ஸ் வென்ற போட்டிகள் - 4
- முடிவு இல்லாத போட்டிகள் - 1
புள்ளி விவரங்கள்:
- பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள்: 949 (விராட் கோலி)
- டெல்லி அணிக்காக அதிக ரன்கள்: 184 (பிரித்வி ஷா)
- பெங்களூர் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: 10 (முகமது சிராஜ்)
- டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகள்: 7 (அன்ரிச் நார்ட்ஜே)
- பெங்களூர் அணிக்காக அதிக கேட்ச்கள்: 15 (விராட் கோலி)
- டெல்லி அணிக்காக அதிக கேட்சுகள்: 5 (டேவிட் வார்னர்)
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், கர்ன் சர்மா, முகமது சிராஜ்.
டெல்லி கேபிடல்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், அக்சர் படேல், லலித் யாதவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -