ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 64வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.


அதிரடி வீரர் டேவிட் வார்னர் கோல்டன் டக் அவுட்டாகினார். அடுத்து ஜோடி சேர்ந்த சர்பாஸ் கானும், மிட்ஷெல் மார்ஷூம் அதிரடியாக ஆடினர். சர்பாஸ்கான் 16 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மிட்ஷெல் மார்ஷூக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த லலித்யாதவ் 21 பந்துகளில் 24 ரன்களுடன் அவுட்டானார்.


அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப்பண்ட் 3 பந்துகளில் 1 சிக்ஸருடன் 7 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்தில் அவுட்டானார். அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோவ்மென் பாவெல் 2 ரன்களில் அவுட்டானார். விக்கெட்டுகள் ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் பொறுப்புடன் ஆடிய மிட்ஷெல் மார்ஷ் அரைசதம் கடந்தார். பொறுப்புடன் ஆடிய மிட்ஷெல் மார்ஷ் 63 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் அவுட்டானார். இதனால், 20 ஓவர்களில் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.


வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் அணிக்கு சோகம் காத்திருந்தது. போட்டியின் 4வது ஓவர் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது. அனைத்து பேட்டர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜித்தேஷ் ஷர்மா மட்டும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். டெல்லி பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், நார்ட்ஜே 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.






இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு142 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது டெல்லி அணி.