DC vs MI, IPL 2023 LIVE: கடைசிப் பந்தில் வெற்றியை ருசித்த மும்பை; டெல்லியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்..!
IPL 2023, Match 16, DC vs MI: மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் மும்பை 153 -4.
அதிரடியாக ஆடி வந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளார். அவர் 45 பந்தில் 65 ரன்கள் சேர்த்துள்ளார்.
சிறப்பாக ஆடி வந்த திலக் வர்மா தனது விக்கெட்டை 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில் சூர்ய குமார் யாதவ் டக் அவுட் ஆனார்.
இந்த ஓவரில் ரன் எடுக்க திணறிய மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 121 ரன்கள் சேர்த்துள்ளது.
13வது ஓவரை அக்ஷர் பட்டேல் சிறப்பாக வீசியதால் மும்பை அணி இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இந்த ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த ரோகித் சர்மா 29 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டம் ஆடி வரும் ரோகித் சர்மாவால் மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணியின் இஷான் கிஷன் ரோகித் சர்மாவின் அவசரத்தால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகியுள்ளார்.
அதிரடியாக ஆடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை அணிக்கு 173 ரன்கள் இலக்கினை டெல்லி அணி நிர்ணயம் செய்துள்ளது.
19 வது ஓவரில் குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
19வது ஓவரில் நிலைத்து நின்ற வார்னரும் அடித்து ஆடிய அக்ஷர் பட்டேலும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
அதிரடியாக ஆடிவரும் அக்சர் பட்டேல் தனது அரைசதத்தினை 22 பந்தில் எட்டியுள்ளார்.
17வது ஓவரில் அக்ஷர் அடித்த பந்து சூர்ய குமார் யாதவின் கண்ணில் பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த டேவிட் வார்னர் 43 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
இந்த ஓவரில் தான் டெல்லி அணி தனது முதல் சிக்ஸரை விளாசியது. 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் லலித் யாதவ் மும்பை அணியின் ப்யூஷ் சாவ்லா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் குவித்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி மீண்டும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. பவல் 4 ரன்களில் வெளியேறினார்.
10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்துள்ளது.
10வது ஓவரில் டெல்லி அணியின் தூல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவர் 18 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார்.
8வது ஓவரில் டெல்லி அணி ரன்கள் 16 சேர்த்துள்ளது. இந்த ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் சேர்த்துள்ளது.
விக்கெட் விழுந்தாலும் டெல்லி அணி தனது அதிரடி ஆட்டத்தினை குறைக்காமல் விளையாடி வருகிறது. ஐந்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது.
தொடர்ந்து சொதப்பி வரும் ப்ரித்வி ஷா ஹ்ரித்திக் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ப்ரித்விஷா 10 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஓவருக்கு தவறாமல் ஒரு பவுண்டரியை டெல்லி அணி விரட்டி வருகிறது. மூன்று ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி தொடர்ந்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபடுகிறது. இரண்டாவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணி முதல் ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டி தனது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கியுள்ளது. இந்த ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை அணிக்கு எதிராக டெல்லி அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும்.
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரின் 16வது போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். இப்போட்டியானது டெல்லியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் டெல்லிக்கு இது இரண்டாவது சொந்த மைதான போட்டியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. மும்பை அணியும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். ஐபிஎல் 2023 தொடரில் இந்த இரு அணி கேப்டன்களும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்றாத வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும். வார்னர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இரண்டு அரைசதங்கள் அடித்தபோதிலும், தோல்வி விளிம்பில் போராடுகிறது. ரோகித் சர்மா இன்னும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தவில்லை. கடுமையாக் போராடி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இடையிலான கடைசி 5 போட்டிகளில், டெல்லி அணி மூன்று முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மும்பை மற்றும் டெல்லி அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றது.
மொத்தப் போட்டிகள் | 32 |
மும்பை வெற்றி | 17 |
டெல்லி வெற்றி | 15 |
முடிவு இல்லை | 0 |
மும்பை தோல்வி | 15 |
டெல்லி தோல்வி | 17 |
மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 218 |
டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 213 |
மும்பை அணியின் குறைந்த மதிப்பெண் | 92 |
டெல்லி அணியின் குறைந்த மதிப்பெண் | 66 |
இன்றைய போட்டியின்மூலம், இந்த இரு அணிகளில் தொடர் தோல்விக்கு இன்று ஒரு முடிவு கிடைக்கும். தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடும் டெல்லி அணி, எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும். டெல்லி கோட்லா ஒரு சிறிய மைதானம் எனவே டெல்லி முடிந்த அளவு வெற்றியை ருசிக்க கடுமையாக போராடும்.
DC vs MI ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ்:
- மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரோஹித் சர்மா - 727
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரிஷப் பந்த்-372
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா 23
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: அமித் மிஸ்ரா- 19
புள்ளி விவரங்கள் | வீரர்கள் | மதிப்பீடு |
அதிக ரன்கள் | ரோஹித் சர்மா (மும்பை) | 727 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள் | ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) | 23 விக்கெட்டுகள் |
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் | வீரேந்திர சேவாக் (டெல்லி) | 95* ரன்கள் |
சிறந்த பந்துவீச்சு படம் | லசித் மலிங்கா (மும்பை) | 5/13 |
கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:
டெல்லி கேபிடல்ஸ் அணி : டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, ரிலீ ரோசோவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், லலித் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி
மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், அர்ஷத் கான், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -