CSK vs SRH, IPL 2023 LIVE: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி..!
IPL 2023, Match 29, CSK vs SRH: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
18.4 ஓவர்களில் சென்னை 3 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பாக ஆடி வரும் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது.
9 பந்தில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹானே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடி வரும் சென்னை அணி 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக ஆடிவந்த ருத்ராஜ் கெய்க்வாட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.
அதிரடியாக ஆடிவரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் சேர்த்துள்ளது.
கான்வே அதிரடியாக விளையாடி 33 பந்தில் 50 ரன்களை எடுத்தார். இது அவருடைய மூன்றாவது அரைசதம் ஆகும்.
அதிரடியாக ரன்கள் சேர்த்து வரும் சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் சேர்த்துள்ளது. மேலும், 6வது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர் ஐந்து பவுண்டரி விரட்டப்பட்டது.
சிறப்பாக பந்து வீசிய சென்னை அணிக்கு 135 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது ஹைதராபாத் அணி..!
ஹைதராபாத் அணி 14.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 100 ரன்களை எட்டியுள்ளனர்.
ஜடேஜா தனது மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். மயாங்க அகர்வாலை 2 ரன்னில் வெளியேற்றினார்.
21 பந்தில் 21 ரன்கள் சேர்த்த ராகுல் த்ரிபாட்டி தனது விக்கெட்டை ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ரன்கள் சேர்த்து வரும் ஹைதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்துள்ளது.
30 பந்தில் 36 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளது.
பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமான சேப்பாக்கத்தில் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் அணி நிதானமாக ஆடி வருகிறது. 5 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த ஹைதராபாத் அணி 4.2 ஓவர்களில் தனது முதல் விக்கெட்டினை இழந்துள்ளது. அந்த அணியின் ஹேரி ப்ரூக் 18 ரன்னில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்.
Background
ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
சென்னை - ஐதராபாத் மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முன்னதாக இந்த ஒரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை மோதியுள்ளன. அவற்றில் 14 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், 4 போட்டிகளில் சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணியிடம் ஒருமுறை கூட சென்னை அணி தோல்வி கண்டதில்லை. சேப்பக்கம் மைதானத்தில் சென்னை அணி இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 223
சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 192
ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 132
சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 134
தனிநபர் சாதனைகள்:
ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சென்னை அணி வீரர்: தோனி, 424 ரன்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: அபிஷேக் ஷர்மா, 163 ரன்கள்
ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை அணி வீரர்: தீபக் சாஹர், 9 விக்கெட்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: புவனேஷ்வர் குமார், 9 விக்கெட்கள்
ஒரு போட்டியில் தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் - ஷேன் வாட்சன், 117*
சிறந்த பந்துவீச்சு - முகேஷ் சவுத்ரி, 4/46
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணியோ 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற சென்னை அணியை காட்டிலும், ஐதராபத் அணி அதிக முனைப்பு காட்டி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -