CSK vs SRH, IPL 2023 Playing XI:
ஐபிஎல் தொடரின் 16வது சீசனில்ன் இன்று அதாவது ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. சென்னை அணியைப் பொறுத்தவரை இங்கு நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால், சொந்த மண்ணில் வெற்றி பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது.
சென்னை - ஹைதராபாத் மோதல்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல், ஹைதராபாத் அணியும் 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற சென்னை அணியை காட்டிலும், ஹைதராபாத் அணி தனித்திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் 19 முறை மோதியுள்ளன. அவற்றில் 14 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், 4 போட்டிகளில் சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணியிடம் ஒருமுறை கூட சென்னை அணி தோல்வி கண்டதில்லை. சேப்பக்கம் மைதானத்தில் சென்னை அணி இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்
ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
டி நடராஜன், விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், சன்வீர் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா
சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
அம்பதி ராயுடு, ஷேக் ரஷீத், எஸ் சேனாபதி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆர் ஹங்கர்கேகர்