ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சென்னை - ஐதராபாத் மோதல்:


ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோத உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஜியோ சினிமா தொலைக்காட்சியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முன்னதாக இந்த ஒரு அணிகளுக்கு இடையேயான போட்டியில், யார் அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை இந்த  தொகுப்பில் அறியலாம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் 19 முறை மோதியுள்ளன. அவற்றில் 14 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக இவ்விரு அணிகளும் மோதிய 5 போட்டிகளில், 4 போட்டிகளில் சென்னை அணி தான் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணியிடம் ஒருமுறை கூட சென்னை அணி தோல்வி கண்டதில்லை. சேப்பக்கம் மைதானத்தில் சென்னை அணி இதுவரை 62 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.   


ஸ்கோர் விவரங்கள்:


ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 223


சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 192


ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 132


சென்னை அணிக்கு எதிராக ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 134


தனிநபர் சாதனைகள்:


ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சென்னை அணி வீரர்: தோனி, 424 ரன்கள்


சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: அபிஷேக் ஷர்மா, 163 ரன்கள்


ஐதராபாத் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை அணி வீரர்: தீபக் சாஹர், 9 விக்கெட்கள்


சென்னை அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த ஐதராபாத் அணி வீரர்: புவனேஷ்வர் குமார், 9 விக்கெட்கள்


ஒரு போட்டியில் தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் - ஷேன் வாட்சன், 117*


சிறந்த பந்துவீச்சு - முகேஷ் சவுத்ரி, 4/46


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணியோ 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற சென்னை அணியை காட்டிலும், ஐதராபத் அணி அதிக முனைப்பு காட்டி வருகிறது.