CSK vs SRH, IPL 2023 1st Innings Highlights: நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிஒங் தோனி ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய ஹைதராபாத் அணி தனது பேட்டிங்கை சிறப்பாக ஆரம்பித்தது. பவர்ப்ளேவில் கனிசமாக ரன்கள் சேர்த்து வந்தது. கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் எனப்படும் கேரி ப்ரூக் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 13 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடி வந்த ஹைதராபாத் அணி 50 ரன்களையே 7வது ஓவரில் தான் எட்டியது. தொடர்ந்து சீராக ரன்கள் சேர்த்து வந்த அந்த அணி 10வது ஓவரில் 2வது விக்கெட்டை இழந்தது. அப்போது அந்த அணி 71 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி ரன் எடுக்க தடுமாறியது. சென்னையின் மிரட்டலான பந்து வீச்சும் அதற்கு ஏற்றபடி இருந்த ஃபீல்டிங்காலும் ஹைதராபாத் அணியால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா மட்டும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இவரது பந்து வீச்சில், ஹைதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிபாட்டி, மயங்க் அகர்வால் ஆகியோர் வெளியேறினர்.
இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் அபிஷேக் சர்மா மட்டும் 34 ரன்கள் எடுத்து இருந்தார். மீதி யாரும் 30 ரன்களைக் கடக்கவில்லை. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஆகாஷ் சிங், தீக்ஷனா, மதீஷா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மைதானத்திற்கு வந்து பார்த்து வருகிறார்.