எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இன்று தனது 4வது போட்டியில் களமிறங்குகியுள்ளது. இந்த போட்டியானது எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.  


இந்த தொடரில் இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்குகிறது. 


ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை அணி 15 முறையும், ராஜஸ்தான் 11 முறையும் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஐந்து மோதல்களில் 4 ல் வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும், இன்றைய போட்டியில் சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற இருப்பதால் அனைவரது எதிர்பார்ப்பும் சென்னை அணி மீது உள்ளது. மேலும், சென்னை அணிக்காக தோனி இன்று தனது 200 வது போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், குல்தீப் சென், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


 ரியான் பராக், டொனாவன் ஃபெரீரா, கேஎம் ஆசிஃப், ஆடம் ஜம்பா, ஜோ ரூட் 


சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), சிசண்டா மகலா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்


சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், ஆர்எஸ் ஹங்கர்கேகர்