CSK vs RR LIVE Score: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
CSK vs RR LIVE Score Updates: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் சென்னை அணி வீரர்கள் ரசிகர்களுக்கு சென்னை அணியின் ஜெர்சி மற்றும் தோனி கையெழுத்திட்ட பந்துகளை பரிசாக வழங்கி வருகின்றது.
சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 16வது ஓவரில் ஜடேஜா ஆட்ட விதிகளை மீறியதாக மூன்றாவது நடுவர் அவரை அவுட் என வெளியேற்றினார். இவர் 6 பந்தில் 4 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணி வீரர் ஷிவம் துபே 18 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.
39 பந்துகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸர் அடித்துள்ளது. இந்த சிக்ஸரை ஷிவம் துபே விளாசியுள்ளார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது.
மொயின் அலி 10 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி 22 பந்துகளில் சென்னை அணி ஒரு பவுண்டரி கூட வீசவில்லை.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 77 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டேரில் மிட்செல் 22 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்து சிறப்பாக இலக்கைத் துரத்தி வருகின்றது.
5.3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 51 ரன்கள் சேர்த்து சிறப்பாக இலக்கைத் துரத்தி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 45 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடி வந்த ரச்சின் ரவீந்திராவை சுழற்பந்து வீச்சாளார் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றி அசத்தினார். ரவீந்திரா 18 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார்.
இதுவரை 15 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றார்.
முதல் ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தன் நிர்ணயம் செய்த 142 ரன்கள் இலக்கை சென்னை அணி துரத்த களமிறங்கியுள்ளது.
20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தேஷ்பாண்டே அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார். இறுதியில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்தது.
20-ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தேஷ்பாண்டே அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்து 6.89 ரன்ரேட்டில் விளையாடி வருகின்றது.
15.3 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் தனது விக்கெட்டினை ஆட்டத்தின் 15வது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் 19 பந்தில் 15 ரன்கள் சேர்த்தார்.
ராஜஸ்தான் அணி இதுவரை மிகவும் மந்தமாகவே ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்தது.
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்து நிதானமாகவே ரன்கள் சேர்த்து வருகின்றது.
ரியான் பராக் கொடுத்த கேட்ச் வாய்ப்பினை தீக்ஷனா வீணடித்தார்.
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சென்னை அணி ரசிகர்களால் சேப்பாக்கம் மைதானம் மஞ்சள் நிறத்தினால் ஜொலித்து வருகின்றது.
8.4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 55 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது. அடுத்த இரண்டு பந்துகளிலும் ராஜஸ்தான் அணி மேற்கொண்டு ரன்கள் சேர்க்காததால், 9 ஓவர்கள் முடியும்போது 55 ரன்கள் சேர்த்திருந்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பட்லர் 25 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை சமர்ஜீத் சிங் கைப்பற்றினார்.
7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 21 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட்டினை இழக்காமல் 42 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. சென்னை அணி கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் விக்கெட் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது ஓவரில் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளை தட்டிவிட்டு அமர்க்களப்படுத்தி வருகின்றார். 5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 36 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆட்டத்தின் 4வது ஓவரில் ராஜஸ்தான் அணி மொத்தம் 13 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேவில் இதுவரையிலான ஓவர்களில் இந்த ஓவரில்தான் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் அதிகம். 4 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த போட்டியின் முதல் சிக்ஸரை ஆட்டத்தின் 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் பறக்கவிட்டார்.
மூன்று ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
சென்னை அணியின் சார்பில் முதல் ஓவரை வீசிய தேஷ்பாண்டே அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ராஜஸ்தான் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது. பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
போட்டி முடிந்து சிறிது நேரம் ரசிகர்கள் மைதானத்தில் காத்திருக்கும்படி சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவல் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை அணியின் இந்த அறிவிப்பு தோனியின் ஓய்வு குறித்து அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருவதால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
Background
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 61வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது செய் அல்லது செத்துமடி போட்டியாகும். ஒருவேளை இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றால் பிளே ஆஃப் கனவு முற்றிலும் சிதைந்துவிடும். சென்னை அணி தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இதுவரை 12 புள்ளிகளுடன் இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இத்தகைய சூழ்நிலையில், பிளே ஆப்களை அடைய, 16 புள்ளிகளை பெற வேண்டும். இதையடுத்து, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி பிளேஆஃப்களை அடைய மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
அதேபோல், சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி இப்போது ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற ஒருவெற்றியுடன் இரண்டு புள்ளிகள் தேவையாக உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
சென்னை சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் ஸ்டேடியம் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புண்டு. இரண்டாவது இன்னிங்ஸின்போது பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஐபிஎல் 2024ல் இந்த ஸ்டேடியத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 183 ரன்க ஆகும்.
இதனால்தான் இங்குள்ள ஆடுகளத்தில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிகிறது. சேப்பாக்கத்தில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இதுவரை 28 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. கடைசி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வெற்றிபெற்றுள்ளது.
கடைசி 5 போட்டிகளில்..
2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2022 - ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2021 - ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2021 - சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, டேரில் மிட்செல், ரிச்சர்ட் க்ளீசன், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), சமீர் ரிஸ்வி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ரோவ்மேன் பவல், சந்தீப் சர்மா, அவேஷ் கான், டொனோவன் ஃபெரீரா, ரியான் பராக், யுஸ்வேந்திர சாஹல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -