CSK vs PBKS Live Score: 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி...! ஹாட்ரிக் தோல்வியடைந்த சென்னை..!
Chennai Super Kings vs Punjab Kings : மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
பஞ்சாப் அணி நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வி ஆகும்.
சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷிவம் துபே 30 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், சென்னை 14.5 ஓவர்களில் 98 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியும், ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடத்தொடங்கியுள்ளனர். சென்னை அணியின் வெற்றிக்கு 48 பந்தில் 112 ரன்கள் தேவைப்படுகிறது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை எட்டியுள்ளது. களத்தில் தோனி 3 ரன்களுடனும், ஷிவம் துபே 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
181 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் பொறுப்பற்ற முறையில் பேட் செய்து ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 13 ரன்களில் ஓடீன் ஸ்மித் பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள சென்னை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏற்கனவே 3 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை அணி தற்போது கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டையும் இழந்துள்ளது. ஜடேஜா ரன் ஏதுமின்றி அர்ஷ்தீப்சிங் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
சென்னை அணியின் முக்கிய வீரரான மொயின் அலி பஞ்சாப் வீரர் வைபவ் வீசிய பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக 181 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ராபின் உத்தப்பா 13 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இதனால், 3 ஓவர்களில் சென்னை 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், சென்னைக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் 60 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு பஞ்சாப் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது. தற்போது பஞ்சாப் 17 ஓவர்களில் 161 ரன்களுடன் ஆடி வருகிறது.
பஞ்சாப் அணிக்காக அதிரடியாக ஆடி வரும் லிவிங்ஸ்டன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 27 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 50 ரன்களை எட்டியுள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக பேட் செய்து வரும் பஞ்சாப் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்கு எதிராக ஆடி வரும் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. முதல் ஓவரிலே கேப்டன் மயங்க் அகர்வால் விக்கெட்டை பறிகொடுத்த பஞ்சாப் இரண்டாவது ஓவரில் முக்கிய வீரர் ராஜபக்சே விக்கெட்டையும் பறிகொடுத்துள்ளது. அவர் 5 பந்தில் 1 சிக்ஸருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
சென்னை அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முகேஷ் பந்துவீச்சில் 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Background
IPL 2022, Match, CSK vs PBKS: 15வது ஐ,பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டித்தொடரின் 11வது ஆட்டத்தில் இன்று மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் 2 போட்டியில் ஆடி ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ள பஞ்சாப் அணியுடன் 2 போட்டியில் ஆடி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி மோத உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -