ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகிறது. இந்த போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தாலும், ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் 2023 பிளே ஆஃப்கள் மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
PBKS Vs CSK போட்டி விவரங்கள்:
- போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் : எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
- நாள் மற்றும் தேதி : ஞாயிறு, 30 ஏப்ரல்
- நேரம் : 03:30 மணி
csk vs pbks ஹெட் டூ ஹெட்:
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இரு அணிகளுக்கு 28 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், சென்னை அணி 16 முறையும், பஞ்சாப் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளது. அதிலும் சென்னை அணியே 4 முறை வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரண்டு முறை பஞ்சாப் அணி வெற்று கண்டுள்ளது.
புள்ளி விவரங்கள் | சென்னை | பஞ்சாப் |
அதிகபட்ச ஸ்கோர் | 240 | 231 |
குறைந்தபட்ச ஸ்கோர் | 116 | 92 |
முதல் பேட்டிங் வெற்றி | 7 | 7 |
இரண்டாவது பேட்டிங் வெற்றி | 8 | 5 |
அதிக ரன்கள் |
சுரேஷ் ரெய்னா -713 ரன்கள் |
கேஎல் ராகுல் - 365 ரன்கள் |
தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் | மைக்கேல் ஹஸ்ஸி (116*) | வீரேந்திர சேவாக் (122) |
அதிக விக்கெட்டுகள் | டுவைன் பிராவோ (18) | பியூஷ் சாவ்லா (10) |
சிறந்த பந்துவீச்சு | எல் பாலாஜி (5/24) | அஸ்வின் (3/23) |
கணிக்கப்பட்ட அணி விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்ஷனா
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
ஷிகர் தவான் (கேப்டன்),அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்