ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களிலேயே சேப்பாக்கம் மட்டும் வித்தியாசமாக உள்ளதால், அதுதொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


சேப்பாக்கம் மைதானம்:


ஐபிஎல் போட்டி என்றாலே பேட்ஸ்மேன்களை மைதானத்தின் நாலாபுறங்களிலும் பந்துகளை அடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான் அனைவருக்கும் நினைவில் வரும். அதற்கு ஏதுவாக தான் மைதானங்களும் தயார்படுத்தப்படும். ஆனால், சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டும் அதில் சற்றே வேறுபடுகிறது. ஒரு அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் போதும், 130 ரன்களை அடித்து கூட வெற்றி பெற்று விடலாம். போட்டி தொடக்கத்தில் மைதானம் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தாலும், நேரம் போக போக மைதானம் முழுமையாக சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிடும் என்பது தான் இதற்கு காரணம். அப்படி தான் ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தின் வரலாறு உள்ளது. இதனால், மற்ற மைதானங்களில் ரன் குவிப்பதை போன்று, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரன்களை எளிதாக குவிக்க முடியாது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் வெற்றி, தோல்வி விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


2021ஐபிஎல் தொடர்:


கடைசியாக கடந்த 2021ம் ஆண்டில் சென்னையில் சில ஐபில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் வெற்றி பெற்றுள்ளன.


இதுவரை விளையாடிய ஐபில் போட்டிகள்: 67


முதலில் பேட்டிங் செய்து பெற்ற வெற்றிகள்: 41


இரண்டாவதாக பேட்டிங் செய்து பெற்ற வெற்றிகள்: 26


டிரா : 0


கைவிடப்பட்ட போட்டிகள்: 0


அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: 127 - முரளி விஜய்  (சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், 2012)


சிறந்த பந்துவீச்சு: 5/15, ஆண்ட்ரே ரஸல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், 2021)


அதிகபட்ச ஸ்கோர்: 246/5 ( சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 2010) 


குறைந்தபட்ச ஸ்கோர்: 70 - (ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், 2019)


அதிகபட்ச ரன் சேஸ்: 159/4 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், 215


முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் - 162


சேப்பாக்கத்தில் கடைசி போட்டி:


கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் தான் முடிவு கிடைத்தது. பிரித்வி ஷா அடித்த அரைசதத்துடன் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 159 ரன்களை அடித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியும், கேன் வில்லியம்சனின் அரைசத்தால்  20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை சேர்த்தது.  அந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் 5 விக்கெட்டுகள், சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.  இறுதியில் சூப்பர் ஓவர் முடிவில் டெல்லி அணி ஐதராபாத்தை வீழ்த்தியது.