CSK vs KKR Final Live Updates: சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் : ரசிகர்கள் உற்சாகம்

CSK vs KKR IPL 2021 Final Score Live : 2021ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் தோனியின் படையுடன், மோர்கன் படை நேருக்கு நேர் துபாயில் இன்று மோதுகிறது.

சுகுமாறன் Last Updated: 15 Oct 2021 11:30 PM
சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் : ரசிகர்கள் உற்சாகம்

193 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பார்மிலே இல்லாத மோர்கன் அவுட் : 21 பந்தில் 68 ரன்கள் தேவை

கொல்கத்தாவின் கேப்டன் இயான் மோர்கன் 4 ரன்களில் தீபக் சாஹர் பிடித்த அற்புதமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார். கொல்கத்தாவின் வெற்றிக்கு 21 பந்தில் 68 ரன்கள் தேவைப்படுகிறது.

வெற்றியின் விளிம்பில் சென்னை : 7வது விக்கெட்டையும் பறிகொடுத்தது கொல்கத்தா

கொல்கத்தாவின் அதிரடி வீரர் ராகுல் திரிபாதி 2 ரன்களில் வெளியேறினார். இதனால், சென்னை அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் : தோல்வியின் பிடியில் கொல்கத்தா?

கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் சூழலில் தற்போது 6வது விக்கெட்டாக ஷகிப் அல் ஹசன் விக்கெட்டையும் இழந்து தடுமாறி வருகிறது. 

5வது விக்கெட்டை இழந்த கொல்கத்தா : மோர்கன் காப்பாற்றுவாரா?

கொல்கத்தாவின் வெற்றிக்காக அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 7 பந்தில் 1 சிக்ஸருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  

அரைசதம் அடித்த உடனே சுப்மன்கில் காலி : 111 ரன்களுக்கு 4 விக்கெட்

கொல்கத்தா அணிக்காக தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வரும் சுப்மன்கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்தார். ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்திலே தீபக் சாஹர் வீசிய பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.

டேஞ்சர் பேட்ஸ்மேன் சுனில் நரைன் காலி

கொல்கத்தா அணிக்காக பேட்டிங்கில் அதிரடி காட்டும் சுனில் நரைன் 2 ரன்களில் ஹேசில்வுட் வெளியேற்றினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாக்கூர்

கொல்கத்தா அணிக்காக இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிதிஷ் ராணா ரன் ஏதுமின்றி ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் பந்திலே பாப்டுப்ளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டை பறிகொடுத்த கொல்கத்தா - வெங்கடேஷ் அய்யரை காலி செய்த ஷர்துல் தாக்கூர்

கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வெங்கடேஷ் அய்யர் 32 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

10 ஓவர்களில் 88 ரன்கள் - கொல்கத்தா வீரர்கள் அபாரம்

கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 88 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன்கில் 29 பந்தில் 36 ரன்களுடனும், வெங்கடேஷ் அய்யர் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

வெங்கடேஷ் அய்யர் அதிரடி அரைசதம்

193 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் கொல்கத்தாவின் தொடக்க வீரர் வெங்கடேஷ் 31 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 ரன்களை அடித்தார்.

தொடக்க வீரர்கள் அபாரம் : சுப்மன்கில் நிதானம் : வெங்கடேஷ் அய்யர் அதிரடி

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில் நிதானமாக ஆட, வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக ஆடி வருகின்றார்.

பவர்ப்ளேவில் 55 ரன்கள் : வெங்கடேஷ் - சுப்மன்கில் அபாரம்

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆடி வரும் கொல்கத்தா அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை குவித்துள்ளது.

4 ஓவர்களில் 36 ரன்கள் - கொல்கத்தா அதிரடி தொடக்கம்

கொல்கத்தா அணி 4 ஓவர்கள் முடிவில் 36 ரன்களை எடுத்துள்ளது. வெங்கடேஷ் 21 ரன்களுடனும், சுப்மன்கில் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

சுப்மன் கில்லிற்கு கேட்ச்சை கோட்டை விட்ட ஷர்துல் தாக்கூர்

கொல்கத்தாவின் தொடக்க வீரர் சுப்மன் கில் வீசிய அளித்த கடினமான கேட்ச் வாய்ப்பை ஷர்துல் தாக்கூர் கோட்டைவிட்டார்.

வெங்கடேஷ் அய்யருக்கு கேட்ச்சை கோட்டைவிட்ட தோனி

கொல்கத்தாவின் தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி தவறவிட்டார்.

2012ல் நிர்ணயித்த அதே இலக்கை மீண்டும் நிர்ணயித்த சென்னை : 193 ரன் எடுத்தால் கொல்கத்தாவிற்கு கோப்பை

2012ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவிற்கு எதிராக அடித்த அதே 192 ரன்களை இன்றைய போட்டியிலும் அடித்துள்ளனர்.

பெர்குசனை விளாசித்தள்ளிய சென்னை வீரர்கள்

கொல்கத்தாவின் பிரதான பந்துவீச்சாளரான பெர்குசன் 4 ஓவர்களில் சென்னை வீரர்கள் 56 ரன்களை விளாசித் தள்ளினர்.

150 ரன்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தது. பாப் டுப்ளிசிஸ் 69 ரன்களுடனும், மொயின் அலி 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கொல்கத்தாவின் முக்கிய வீரர் ராகுல் திரிபாதி காயம்

கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ராகுல் திரிபாதி காலில் காயம் அடைந்து பெவிலியனில் அமர்ந்துள்ளார். இதனால், அவர் பேட் செய்வாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

கடைசி 4 ஓவர்கள் : அதிரடி காட்டுமா சென்னை?

ராபின் உத்தப்பா ஆட்டமிழந்த பிறகு சென்னை அணியின் ரன்ரேட் விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், கடைசி 4 ஓவர்களில் சென்னை அணி அதிரடி காட்டுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உத்தப்பாவை வெளியேற்றினார் சுனில் நரைன்

சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த  ராபின் உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸர் அடித்த நிலையில் 31 ரன்கள் எடுத்து சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.

26 பந்தில் 50 ரன்கள் : உத்தப்பா - பாப் டுப்ளிசிஸ் அபாரம்

சென்னை அணிக்காக 2வது விக்டெ்டிற்கு ஜோடி சேர்ந்து ஆடி வரும் உத்தப்பாவும், பாப் டுப்ளிசும் 26 பந்தில் 50 ரன்களை குவித்துள்ளனர்.

அரைசதம் கடந்த பாப் டுப்ளிசிஸ் : சதம் கடந்த சென்னை

கொல்கத்தாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் பந்தில் சிக்ஸர் அடித்து பாப் டுப்ளிசிஸ் அரைசதத்தை கடந்தார். அவர் 35 பந்தில் 52 ரன்களை எடுத்து ஆடி வருகிறார். சென்னை அணி 12வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. 

10 ஓவர்களில் 80 ரன்கள் - அதிரடி காட்டும் பாப், உத்தப்பா ஜோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை குவித்துள்ளது. உத்தப்பா 9 ரன்களுடனும், பாப் டுப்ளிசிஸ் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ருதுராஜை வெளியேற்றினார் சுனில் நரைன் - முதல் விக்கெட்டை இழந்தது சென்னை

சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் சுனில் நரைன் வீசிய 9வது ஓவரில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார்.

ஹர்பஜன்சிங் : கடந்த முறை சென்னை - இந்த முறை கொல்கத்தா

சென்னை அணிக்காக கடந்த மூன்று தொடர்களில் ஆடிய ஹர்பஜன் சிங் இந்த முறை கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால், அவர் ஆடும் லெவனில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6 முறை பவர்ப்ளேவில் 50 : 6 முறையும் சென்னை வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் 6 முறை பவர்ப்ளேவில் 50 ரன்களை அடித்துள்ளது. அந்த 6 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

பவர்ப்ளேவில் அதிரடி : 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்

கொல்கத்தா அணிக்கு அதிரடியாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை எடுத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களுடனும், பாப் டுப்ளிசிஸ் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஐ.பி.எல்.லில் அதிக ரன்கள் : ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 24 ரன்களை அடித்தபோது கைப்பற்றினார்.

4 ஓவர்களில் 34 ரன்கள் - அதிரடி காட்டும் சென்னை

கொல்கத்தா அணிக்கு எதிராக பேட் செய்து வரும் சென்னை அணி 4 ஓவர்கள் முடிவில் 34 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது. ருதுராஜ் 23 ரன்களுடனும், பாப் டுப்ளிசிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டுப்ளிசிஸிற்கு கிடைத்த ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்ட தினேஷ் கார்த்திக்

ஷகிப் அல் ஹசன் பந்தில் பாப் டு ப்ளிசிசை அவுட்டாக்குவதற்கு கிடைத்த அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார்.

முதல் ஓவரிலே சென்னை பவுண்டரி

துபாயில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்துள்ளது. முதல் ஓவரிலே ருதுராஜ் பவுண்டரி அடித்து அசத்தினார். 

ஐ.பி.எல். இறுதிப்போட்டி : டாஸ் வென்றது கொல்கத்தா - சென்னை முதலில் பேட்டிங்

2021ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் கொல்கத்தா கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளனர்.

சென்னை பயிற்சியாளருக்கும், கொல்கத்தா பயிற்சியாளருக்கும் தல தோனி

கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கொல்கத்தாவின் பயிற்சியாளர் மெக்கல்லம், சென்னை பயிற்சியாளர் பிளமிங் இருவருக்கும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.

யெல்லோவ் ஆன் வீல்ஸ்.... கலகலப்பாகுது ஐபிஎல் ரேஸ்

ஸ்டேஜ் ரெடி.. பிபி மாத்திரைகளோடு ஐ.பி.எல் ரசிகர்கள்..

Top IPL Catches | ஜடேஜா டூ திவாட்டியா- வித்தை காட்டிய ஐபிஎல் 2021 தொடரின் டாப் கேட்ச்கள் !

CSK vs KKR Final : சென்னை கேப்டன் தோனி VS கொல்கத்தா கேப்டன் மோர்கன் - 2021 ஐ.பி.எல்.லில் பெர்மாமன்ஸ் எப்படி?

RCB Wishes CSK | பெஸ்ட் அணி கோப்பையை ஜெயிக்கட்டும் - வாழ்த்திய ஆர்சிபி.. நன்றி சொன்ன சிஎஸ்கே !

Background

ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு களமிறங்குகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.