அகமதாபாத்தில் கனமழை பெய்து வருவதால், இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி 3 பந்து வீசப்பட்ட நிலையில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 


16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமாதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி நேற்று நடத்தப்படவில்லை, காரணம் அதிகப்படியான மழை தான். இதனால் போட்டி இன்று அதாவது மே 29ஆம் தேதி நடைபெறுகிறது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து 4 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது தொடங்கிய கனமழை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்ததால், போட்டி நிறுத்தப்பட்டது. 


இதனால் ஆடுகளத்தை விட்டு, வீரர்கள் வெளியேறினர். 20 நிமிடங்களுக்கு பெய்த கனமழையால் ஆடுகளம் மிக மோசமாக நனைந்தது. இதனால் மைதான பராமரிப்பாளார்கள் ஆடுகளத்தில் உள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் லேசான தூரல் மற்றும் மின்னல் தற்போது (இரவு 10.15 மணி) இருப்பதாக களத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.