IND vs AUS, WTC Final LIVE Score: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இனி ஆஸ்திரேலியா வசம்.. 209 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!
IND vs AUS Live Score, WTC 2023 Final Day 2: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் லைப் மற்றும் முக்கிய அப்டேட்களை உடனுக்குடன் ஏபிபி தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அருப்புக்கோட்டை அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
23 ரன்களில் ஆட்டமிழந்தார் பரத்
உமேஷ் யாதவ் 1 ரன்னிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்
ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் தாக்கூர்
நிதானமாக விளையாடி வந்த ரகானே 46 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பரத் - ரகானே கூட்டணியை பிரிக்க ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சை தொடங்கியுள்ளது
52.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது
ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ஜடேஜா
49 ரன்கள் அடித்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்
கோலி - ரகானே கூட்டணி தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகள் அவசியம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற கடைசி நாளான இன்று, இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவைப்படுகிறது.
444 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் விராட் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 20 ரன்களுடனும் உள்ளனர்.
மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இந்திய அணி 100 ரன்களை எட்டியுள்ளது.
கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்த புஜாரா தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடிவந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை 43 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லையன் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகிறது.
போலண்ட் பந்து வீச்சில் கில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். கில் 18 ரன்கள் சேர்த்திருந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கம்மின்ஸ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வந்த ஸ்டார்க் தனது விக்கெட்டை 41 ரன்களில் இருந்த போது இழந்து வெளியேறினார். தற்போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி தற்போது இந்திய அணியை விட 400 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேரி 82 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
நான்காவது நாள் மதிய உணவு இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள்ம் எடுத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் சற்று தடுமாற்றத்துடன் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 350 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
95 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் எடுத்திருந்த கேமரூன் க்ரீன் ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இன்சைடு-எஜ் முறையில் இழந்து வெளியேறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எட்டி விளையாடி வருகிறது. இதன் மூலம் 329 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
அரைசதத்தினை நோக்கி ஆடி வந்த லபுஷேன் விக்கெட்டை யுமேஷ் யாதாவ் கைப்பற்றியுள்ளார்.
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.
மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் இதுவரை ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கவாஜா இந்திய வீரர் உமேஷ்யாதவ் பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து 13 ரன்னில் அவுட்டானார்.
மூன்றாவது நாளில் மதிய உணவுக்குப் பிறகான தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 23 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் ஒரு ரன் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியது.
முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அரைசதம் கடந்த தாக்கூர் தந்து விக்கெட்டை க்ரீன் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
பொறுப்புடன் ஆடி வரும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசியுள்ளார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 269 ரன்களை விடவும் அதிகம் எடுத்துள்ளதால், இந்த போட்டியில் ஃபாலோ - ஆன் நிலையைக் கடந்துள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரஹானே, பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் 89 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
மூன்றாவது நாளின் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் சேர்த்துள்ளது.
ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் கூட்டணி 124 பந்தில் 100 ரன்கள் சேர்த்துள்ளனர்.
6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எட்டியுள்ளது.
இந்திய அணியின் ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் வரிசையில் தன்னை 13வது இந்திய வீரராக இணைத்துக்கொண்டார்.
ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சினால் தடுமாறி வரும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எட்டியுள்ளது.
இக்கட்டான நிலையில் இந்திய அணியை தனி மனிதனாக இந்திய அணியை மெல்ல மெல்ல மீட்டு வரும் ரஹானே அரைசதம் கடந்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாடகளைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது.
நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிவந்த ஜடேஜா 51 பந்தில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இந்திய அணி ஏற்கனவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தனது விக்கெட்டை ஸ்டார்க் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
இந்திய அணி 50 ரன்கள் சேர்த்த நிலையில் புஜாரா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
நிதானமாக ஆடி வரும் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் இன்னிங்ஸை நிதானமாக ஆடிவருகிறது இந்திய அணி. இதுவரை 11 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி தேநீர் இடைவெளியின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் எதிர் பார்க்கப்பட்ட கில் போலந்து பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
15 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா தனது விக்கெட்டை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை ஆல்-அவுட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
48 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் தனது விக்கெட்டை கேரி இழந்து வெளியேறினார்.
உணவு இடைவேளைக்கு முன்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்களைக் கடந்து சிறப்பாக ஆடி வருகிறது.
இரண்டாவது நாள் மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் மிட்ஷெல் ஸ்டார்க்கை ரன் அவுட் ஆக்கினார் அக்ஷர் பட்டேல்.
ஸ்மித்தின் 31வது சதம் குறித்து கூடுதலான தகவல்களுக்கு.,
சிறப்பாக ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்களை எட்டி வழுவான நிலையில் உள்ளது.
சிறப்பாக ஆடிவந்த ஸ்மித் ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவர் 268 பந்தில் 121 ரன்கள் சேர்த்துள்ள நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் தேநீர் இடைவெளியின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக சதம் விளாசி சிறப்பாக ஆடிவரும் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை ஸ்மித் விளாசியுள்ளார்.
சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிரீன் தனது விக்கெட்டை ஷமி பந்து வீச்சில் 6 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
டெஸ்ட் போட்டியில் ஒருநாள் ஆட்டம் போல் ஆடிவந்த ஹெட் 174 பந்தில் 163 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை சிராஜ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
இக்கட்டான நிலையில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்துள்ள ஸ்மித் சதம் விளாசி அட்டகாசமாக ஆடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில் 146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
சிறப்பாக ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 81 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 301 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்புடன் ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் சேர்த்துள்ளார்.
பொறுப்புடன் ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித் 144 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் சேர்த்துள்ளார்.
இக்கட்டான சூழலில் இணைந்த ஸ்மித் மற்றும் ஹெட் ஜோடி 172 பந்தில் 100 ரன்கள் சேர்த்துள்ளது.
இக்கட்டான சூழலில் களமிறங்கி சிறப்பாக ஆடிவரும் ஹெட் 60 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 153 ரன்கள் சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் உள்ளது.
29.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது.
25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வந்த லபுசேனை மதிய உணவு இடைவேளை முடிந்ததும் தான் வீசிய முதல் பந்தில் க்ளீன் போல்டாக்கியுள்ளார் முகமது ஷமி.
உணவு இடைவேளைக்குப் பின்னர் முதலாவது நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.
உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 23 ஓவர்கள் எதிர்கொண்டு 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 43 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் 18வது ஓவரினை ஷர்துல் தகுர் வீசினார். அந்த ஓவரில் லபுஷேனின் விக்கெட்டை கைப்பற்ற ரிவ்யூவை பயன்படுத்திய இந்திய அணி அதில் தோல்வி அடைந்து ஒரு ரிவ்யூவை இழந்தது.
போட்டியின் 18வது ஓவரினை ஷர்துல் தகுர் வீசினார். அந்த ஓவரில் லபுஷேனின் விக்கெட்டை கைப்பற்ற ரிவ்யூவை பயன்படுத்திய இந்திய அணி அதில் தோல்வி அடைந்து ஒரு ரிவ்யூவை இழந்தது.
போட்டியின் 15வது ஓவரினை யுமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் டேவிட் வார்னர் நான்கு பவுண்டரிகள் விளாசினார்.
14.5 ஓவரில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை எட்டியது.
10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 22 ரன்கள்- சேர்த்துள்ளது.
போட்டியின் 8வது ஓவரின் முதல் பந்து லபுசாக்னேவிற்கு இடது பெரு விரலில் வேகமாகப்பட்டத்தில் வலியில் துடித்தார். மருத்துவக் குழு உள்ளே வந்து அவருக்கு முதலுதவி அளித்தது. முகமது சிராஜ் இந்த பந்தை 143 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.
6வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி முதல் பவுண்டரி விளாசியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கவாஜா, முகமது சிராஜ் பந்து வீச்சில் வீக்கெட் கீப்பர் பரத்திடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து ரன் ஏதும் சேர்க்காமல் வெளியேறினார்.
3வது ஓவரின் நான்காவது பந்தில் ஆஸ்திரேலிய அணி தனது ரன் கணக்கை தொடங்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
IND vs AUS Live Score, WTC 2023 Final Day 2:
கிரிக்கெட் உலகமே கடந்த சில வாரங்களாக தீவிரமாக உரையாடிக்கொண்டு இருந்த விஷயம் உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். இந்த போட்டி இன்று அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை டேவிட் வார்னர் மற்றும் கவாஜா தொடங்கினர். சிறப்பாக பந்து வீசிய மிகமது சிராஜ் கவாஜாவை ரன் ஏதும் எடுக்க விடாமல் டக் அவுட் செய்தார். இதனால் இந்திய அணிக்கு பெரும் உத்வேகமாக இருந்தது. அதன்பின்னர் சிறப்பாக ஆடி வந்த வார்னர் அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் இருந்த போது தனது விக்கெட்டை ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் இந்திய பந்து வீச்சுக்கு சவால் கொடுத்து வந்த லபுசேன் முகமது ஷமியிடம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்திருந்தது.
அவ்வளவு தான் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடினர். இவர்களது சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.
இருவரும் இந்திய பந்து வீச்சை சராமாறியாக விளாசத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆட, டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார். இந்திய பந்து வீச்சினை நொறுங்கச் செய்தனர். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சில் அதிரடியாக பவுண்டரிகள் விளாசினார் ஹெட். இவரது அதிரடியால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ஹெட் ஒருநாள் போட்டி போல் ஆடிக்கொண்டு இருந்தார். இதனால் இவர் அதிரடியாக அரைசதத்தினைக் கடந்து சதத்தினை நோக்கி முன்னேறினார். 106 பந்தில் தனது சதத்தினை எட்டினார். அதிலும் குறிப்பாக உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் இது இவரது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 6வது டெஸ்ட் சதமாகும்.
அதன் பின்னரும் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் வெளிச்சமின்மை காராணமாக போட்டி நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹெட் 156 பந்தில் 146 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளில் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -